Header Ads



நாடகமாடினாரா ரணில்..? உதவி செய்தாரா உதவிப் பணிப்பாளர்..??


ரணில் கைது செய்யப்பட்டு, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டு, தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றார். ரணில் CID ற்கு செல்லுகின்ற போதும், நீதிமன்றத்திற்கு செல்லுகின்ற போதும் ஆரோக்கியமானவராகவே செல்கின்றார்.


ஆனால் நீதிமன்ற உத்தரவின்பின், அவர் சிறைச்சாலை வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு, மறுநாள் அதிகாலை, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுறார்.


தற்போது விக்ரமசிங்கவிற்கு ஏற்பட்டுள்ள நோய்கள் தொடர்பில் பலரும், ஊடகங்களும் சந்தேகங்களை கிளப்பி, ரணில் என்ற நோயாளியின், நோய்களை பிரதிப் பணிப்பாளர் Dr ருக்‌ஷான் ஏன், பொது வெளியில் குறிப்பிட்டாரென கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.


கொழும்பு தேசிய வைத்தியசாலையின்  ஊழியர்கள் 2301-2023  அன்று Dr ருக்ஷான் பெல்லனவை 2 மணிநேரம் அலுவலகத்தில் பூட்டி வைத்தனர். இதையடுத்து அவர் சுகாதார அமைச்சுக்கு இடமாற்றம் செய்ய அப்போதைய அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தீர்மானித்தார். எனினும் அந்த தீர்மானத்தை தடுத்துநிறுத்தி, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளராக Dr ருக்ஷான் பெல்லன தொடர அப்போதைய ஜனாதிபதி ரணில் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.