Header Ads



ரவியின் குற்றச்சாட்டுக்கு மைத்திரியின் பதில்


முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தனக்கு எதிராக சுமத்திய குற்றச்சாட்டை தான் கேட்கவில்லை எனவும் அது குறித்து தேடி அறிய எதிர்பார்த்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன(Maithripala Srisena)தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் அவர் இதனை கூறியுள்ளார்.

கேள்வி:- முன்னாள் நிதியமைச்சர் நேற்றைய தினம் உங்களை கடுமையாக விமர்சித்துள்ளாரே?

பதில்:- யார்?

கேள்வ:- ரவி கருணாநாயக்க

பதில் :- என்ன கூறியுள்ளார? எனக்கு தெரியாது.

கேள்வி:- உங்களது கோப்புகள் அவரிடம் இருக்கின்றவாம்?.

பதில்:- நான் கேட்கவில்லை. நான் இரத்தினபுரியில் இருந்து இரவே வந்தேன். என்ன என்று நானும் தேடிப்பார்க்க வேண்டும்.

கேள்வி:- எதிர்காலத்தில் உங்களை பற்றிய அனைத்து தகவல்களையும் வெளியிட போவதாக ரவி கருணாநாயக்க கூறியுள்ளார்.

பதில்:- இந்த அரசியல் உலகத்தில் அதிகமான நெருக்கடிகள். சரியான குழப்பம். இதனால், அவை சாதாரணமானவை. அவை பிரச்சினைகள் அல்ல. நாங்கள் அவற்றை பெரிதாக எடுத்துக்கொள்ள போவதில்லை.

கேள்வி:- முன்னாள் நிதியமைச்சரே இதனை கூறியுள்ளார்.

பதில்:- சரி, சரி.சரி எவரும் கூறட்டும், எதனையும் கூறட்டும் என மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க (Ravi Karunanayake), முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று முன்தினம் கடுமையாக விமர்சித்திருந்ததுடன் நிதி மோசடி உட்பட பல குற்றச்சாட்டுக்களை சுமத்தி இருந்தார்.

இவை சம்பந்தமாக தன்னிடம் சாட்சியங்கள் இருப்பதாகவும் இந்த விடயம் தொடர்பில் பகிரங்க விவாதம் ஒன்றுக்கு வருமாறும் ரவி கருணாநாயக்க, முன்னாள் ஜனாதிபதிக்கு சவால் விடுத்திருந்தார். TW

1 comment:

  1. இரண்டும் அலிபபா கூட்டத்தில் புகழ் பெற்ற கள்வர்கள். ஒருவரை விட மற்றவர் சூழ்ச்சி செய்வதில் திறமையானவர்கள். நாட்டை முன்னெடுக்க அகற்ற முடியாத மிகப் பெரும் தடைக்கற்கள்.

    ReplyDelete

Powered by Blogger.