Header Ads



எமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக, சமூகம் விழிப்படைய வேண்டும் - நஸீர் அஹமட்


- ஏ.எச்.ஏ. ஹுஸைன் -

தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக சமூகம் விழிப்படைய வேண்டிய தேவை இருக்கின்றது என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி இணைப்புக் குழுவின் தலைவருமான நஸீர் அஹமட் தெரிவித்தார்.

கிராமியப் பாலங்களை அபிவிருத்தி செய்யும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் ஏறாவூரில்  02 பாலங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு திறந்து வைக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை 19.12.2021 ஏறாவூர் நகரில்; இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட்  உரையாற்றினார். தொடர்ந்து அங்கு உரையாற்றிய அவர் ஏறாவூரின் பிரதேச எல்லை விஸ்தரிக்கப்படவேண்டிய தேவை இருக்கிறது.

ஏறாவூர் பற்று பிரதேச செயலகப் பிரிவில் 32 கிராமங்களில் வாழ்ந்த முஸ்லிம்கள் 31 வருடங்களாக விரட்டியடிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றார்கள்.

இவ்வளவு காலங்களும் அவர்கள் அங்கு வசித்திருந்தால் அந்தக் கிராமங்கள் நகரங்களாக மாறியிருக்கும்.

அவ்வாறு எங்களுடைய உரிமைகளைப் பறித்து விட்டு எங்களை வாய்மூடி மௌனியாக இருக்கச் சொல்லுகின்ற விடயம் எவ்வாறு நியாயமாகும்.

ஒரு இனத்தின் உரிமையைக் கேட்பது இனவாதமல்ல அது கடமை. இன்னுமொரு இனத்திற்கு நியாயமாகக் கிடைக்கக் கூடிய உரிமைகளை மறுப்பதும் தடுப்பதுதான் இனவாதம்.

வடக்கிலே இருந்து எல்ரீரீஈ இனரால் முஸ்லிம் சமூகம் மாத்திரம் வெளியேற்றப்பட்டது இனவாதம்

ஏறாவூரில் நடுநிசியில் உறக்கத்திருந்த முஸ்லிம்களை மாத்திரம் குறி வைத்து கொன்றொழித்தது இனவாதம். காத்தான்குடியிலே பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்களைக் சுட்டு அழித்தது இனவாதம். முஸ்லிம்கள் என்ற ஒரேயொரு காரணத்துக்காக மட்டக்களப்பு மவாட்டத்திலே முஸ்லிம்கள் வாழ்ந்த 32 கிராமங்களை விட்டும் முஸ்லிம்களைத் துரத்தி அடித்து  வெளியேற்றியது இனவாதம். அந்தக் கிராமங்களை இன்றுவரை கொடுக்காமல் இருப்பதும் இனவாதம்.

ஏறாவூர்பற்று பிரதேச செயலானர் பிரிவில் 1 இலட்சத்து 60 ஆயிரம் ஏக்கர் சதுர கிலோமீற்றர் காணிகள் இருக்கத் தக்கதாக ஏறாவூர் முஸ்லிம்களை வெறும் 923 ஏக்கர் காணிகளுக்குள் அடக்கி ஒடுக்கி வைத்திருக்கிறார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 பிரதேச செயலகப் பிரிவுகளில் 26 சத வீதம் வாழ்கின்ற முஸ்லிம்கள் வெறும் 1.3 வீதக் காணிகளுக்குள்ளேயே முடக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 2640 சதுர கிலோமீற்றர் காணிகளில் குறைந்த பட்சம் முஸ்லிம்களுக்கு  800 சதுர கிலோமீற்றராவது தரப்பட வேண்டும்.

இந்த விடயத்தில் சமூகம் விழிப்படைய வேண்டிய தேவை இருக்கின்றது.” என்றார்.

இந்நிகழ்வில் ஏறாவூர் நகரசபை தவிசாளர் எஸ்.எம் நளீம், பிரதித் தவிசாளர்  எம்.எல். ரெபுபாசம், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்கள் உட்பட பிரதேச பொதுமக்களும் ஊர்ப்பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

5 comments:

  1. முஸ்லீம் சமூகத்தின் காணிப்பிரச்சினைகளை தீர்த்து வைப்பது தான் முஸ்லீம் அரசியல்வாதிகளின் தலையாய கடமையாக இருக்க வேண்டும்

    ReplyDelete
  2. எமது சமூகம் பாதிக்கப்பட்ட தற்கு மூலகாரணம் தமிழ் பயங்கரவாத அமைப்புகளின் அடாவடித்தனம் அதிகரித்து முஸ்லிம் பிரதேச காணிநில ஆக்கிரமிப்பு மட்டும் மன்றி ஊருக்குள் புகுந்து அப்பாவி குழந்தைகள் ஐ தாயின் வயிற்றை கீறி இரத்த வெறி பிடித்து ஆடும் வரை இந்திய இந்து வெறிஆட்சியாளர்களின் புலனாய்வு அமைப்பு களுக்கு இலங்கையில் இடம் கொடுத்து வந்த சம்பவம் தான் அடிப்படை. அப்போதிருந்தே இந்திய இந்து இரத்த வெறி கூட்டம் இலங்கையில் இந்து வெறி வேரூன்ற இலங்கை தமிழ் ஈழ வெறிநாய்க்கூட்டமே மூல காரணம் அந்த நாய்கள் அப்பவே அப்படியே அழிக்க பட்டிருக்க வேண்டும் தற்போது இன்னும் உயிருடன் உள்ள கருனை இல்லாத வெறி நாய் தொடங்கி சாணக்கியன் வரை சகலரும் சத்தியத்தை நிராகரித்து வரும் சத்துராதி துவேஷக்கூட்டமே இவர்கள் ஆடும் நாடகம் விரைவில் முடிவுக்கு வரும் அப்பாவி முஸ்லிம்களை வைத்து விளையாட நினைக்கும் குள்ள நரி நாய் களின் வேஷம் இனி யாவது களையப்பட வேண்டும். தமிழ் ஈழம் மோடி யின் ( மூ---ம்) மூலம் அவர்களுக்கு கிடைக்க ஞான சாத்தான் உதவட்டும். சத்தியமே வெல்லும் அசத்தியம் அழிந்துவிடும்.

    ReplyDelete
  3. தமது வாக்கு வங்கியை அதிகரித்துக் கொள்ளவும்
    தமது பிழைகளையும் சுயநலத்தை யும் மூடி மறைப்பதற்காகவுமே அரசியல் வாதிகள் இந்த இனவாதத்தை கையில் எடுத்துள்ளார்கள்.எனவே மக்களே விழிப்பாக இருங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.