Header Ads



10 சிறந்த உலக தலைவர்களில், ஜனாதிபதி கோட்டாபயவும் ஒருவர் - ஜோன்ஸ்டன்


கொரோனா தொற்று நோயின் போது குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்த 10 சிறந்த உலக தலைவர்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் ஒருவர் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வரலாற்றில் இடம் பெறுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பதுளை-செங்கலடி வீதியின் பிபில முதல் செங்கலடி வரையிலான 87 கிலோமீற்றர் பகுதியை இன்று திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்திற்கு ஆரோக்கியமான அபிவிருத்தியை உறுதி செய்வதே ஜனாதிபதியின் முயற்சியாகும்.

கொவிட் -19 தொற்றுநோய் ஏற்பட்ட போது அனைத்து நாடுகளும் பொருளாதார சவால்களை எதிர்கொண்டதாகவும், உலகத் தலைவர்கள் பொது உயிர்களைக் காப்பாற்றுவதில் பெரும் சவாலை எதிர்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் விடாமுயற்சியினால் நாடு முழுவதும் தடுப்பூசிகள் போடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கொவிட்-19 தடுப்பூசி இயக்கத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவளிக்கவில்லை என்றும், திட்டத்தை நாசப்படுத்தவே முயன்றது.

குறுகிய காலத்தில் இலங்கை மிகவும் அபிவிருத்தி நாடாக அறியப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

5 comments:

  1. பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மிளகாய்த்தூள் வீசி அவமானப்படுத்தி இந்த நாட்டு மக்களைப் போதைப்பித்தர்களாக மாற்றும் பாரிய பொறுப்பைச் செய்து வரும் போதை மன்னர் தற்போது 'புதுமையான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றார். இவர் உடனடியாக மனநோய் மருத்துவரின் பரிசோதனைக்கு உற்படுத்தப்பட வேண்டியவர் என்ற உண்மையை அதிகாரத்தில் இருப்பவர்கள் தற்போது உணர்ந்து செயற்படாவிட்டால் அதன் விளைவு மிகவிரைவில் பாரதூரமானதாக அமையும்.

    ReplyDelete
  2. பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மிளகாய்த்தூள் வீசி அவமானப்படுத்தி இந்த நாட்டு மக்களைப் போதைப்பித்தர்களாக மாற்றும் பாரிய பொறுப்பைச் செய்து வரும் போதை மன்னர் தற்போது 'புதுமையான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றார். இவர் உடனடியாக மனநோய் மருத்துவரின் பரிசோதனைக்கு உற்படுத்தப்பட வேண்டியவர் என்ற உண்மையை அதிகாரத்தில் இருப்பவர்கள் தற்போது உணர்ந்து செயற்படாவிட்டால் அதன் விளைவு மிகவிரைவில் பாரதூரமானதாக அமையும்.

    ReplyDelete
  3. உங்களைப் போன்ற வருக்கு சொல்ல வேண்டிய வார்த்தை வேறு இருக்கு வாயை மூடிக்கொண்டு சும்மா போங்கடா பொறுக்கி கூட்டம்

    ReplyDelete
  4. Ippudiye solliye pohattum naadu....mokkanaaku

    ReplyDelete
  5. 'குறுகிய காலத்தில் இலங்கை மிகவும் அபிவிருத்தி நாடாக அறியப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்."

    If there is a competition to pick the top Boot Lickers in the World, this guy, Johnston Fernando, will easily beat everybody and emerge right on top.

    ReplyDelete

Powered by Blogger.