Header Ads



சுதந்திரக் கட்சியின் ஆதரவு எமக்குத் தேவையில்லை, அரசில் இருக்க முடியாவிட்டால் வெளியேறட்டும்


"ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு எமக்குத் தேவையில்லை. ஆட்சியை முன்னெடுப்பதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலமும் அவசியமில்லை." என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த அரசின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சின் கைகளிலேயே தங்கியுள்ளது என அக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டிருந்த அறிவிப்பு தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

"இப்படியெல்லாம் பிரச்சினை வரும் எனத் தெரிந்துதான், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்காரர்களுக்கு வேட்புமனு வழங்க வேண்டாம் என நான் அன்றே வலியுறுத்தினேன்.

தற்போது அரசில் இருக்க முடியாவிட்டால் வெளியேறட்டும். அதனால் எமக்குப் பாதிப்பு இல்லை.

அரசுக்குள் இருந்துகொண்டு சிறப்புரிமைகளை அனுபவித்தபடி விமர்சனங்களை முன்வைப்பதைவிடவும், வெளியேறுவதே நல்லது" என தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.