Header Ads



தனது பேரனை ஒப்படைத்துவிட்டு, தண்ணீரால் மூழ்கடிக்கப்பட்டு உயிர்தியாகம் செய்த முதியவர் - கிண்ணியாவில் சோகம்


முதியவரொருவர் தனது பேரனை பாடசாலைக்கு கொண்டு வந்து விடுவதற்காக பாதையில் (Floating Boat) ஏறியிருந்தார்.

பாதை கரையை அடைய இன்னும் சொற்ப தூரமே இருந்தது. தான் பெரிதாக படிக்கவில்லையென்றாலும், பேரனை படிக்க வைக்க வேண்டுமென்பதற்காகவும், பேரன் மீதுள்ள பாசத்திலும் அவனை பாடசாலையில் கொண்டு போய் விட்டாலும் கூட, பாடசாலை முடியும் வரை பக்கத்திலுள்ள கடையின் முன்னால் காத்திருந்து வீட்டுக்கு கூட்டி வருவார்.

இன்றும் அப்படித்தான். இரண்டாம் வகுப்பில் படிக்கும் தனது பேரனை பாடசாலைக்கு கூட்டி வந்து கொண்டிருந்தார். பாதை தண்ணீரில் மூழ்கி, புரண்டு கொண்டிருக்கையில் தன்னையும் பொருட்படுத்தாமல் பேரனை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு சுதாகரித்து மெல்ல நீச்சலடித்தார். அதற்குள் பாதை புரண்டதை கண்ட பலரும் தண்ணீரில் குதித்து மூழ்கியிருப்பவர்களை காப்பாற்ற முணைந்து கொண்டிருந்தார்கள். 

அந்த சமயம் ஓர் இளைஞன் முதியவரிடமிருந்து சிறுவனை வாங்கிக் கொண்டு கரையில் கொண்டு வந்து சேர்த்து விட்டான். நீரின் ஆழத்தில் தன்னை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியாமல் திணறினார். பலரும் ஒரொவரையொருவர் காப்பாற்ற மேற்கொண்ட பெரும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் அந்த முதியவர் தண்ணீரில் மூழ்கி இறந்து போனார்.

காப்பாற்றப்பட்ட சிறுவன் தனது வாழ்வில் உயர்ந்து இறந்து போன அப்பாவின் (Grand father) கனவுகளை நிறைவேற்றி அவருடைய கனவுக் கண்களை திறக்கட்டும். இறைவன் அவருக்கு மறுமையில் உயர்ந்த அந்தஸ்தை கொடுக்கட்டும்.

-நஸார் இஜாஸ் -

2 comments:

Powered by Blogger.