November 14, 2021

அரச ஊழியர்களை அவமதிப்பதை, இழிவாகக் கருதி கண்டிக்கிறோம் - சஜித் பிரேமதாச


அரச சேவையானது நாடு தாங்க முடியாத அளவிற்கு பரந்து விரிந்துள்ளதாகவும் அது நாட்டுக்கு சுமை எனவும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுவே அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருக்கும் என கருதுவதோடு, அந்த கருத்தை இழிவாக கருதி வன்மையாக கண்டிக்கிறோம்.

⏺இந்த நாட்டில் அரச சேவையை சீர்குலைப்பதற்கு அரசாங்கம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தயாராகி வருகின்றது என்பது தெளிவாகின்றது.அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை 60லிருந்து 65 ஆக உயர்த்துவதான ஒரு திட்டத்தை அமைச்சர் வரவு செலவு திட்ட உரையில் குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து அரச ஊழியர்கள் நாட்டுக்கு சுமையாக இருப்பதாக ஒரு கருத்தையும் முன்வைத்தார். தான் முன்வைத்த தனது சொந்த கருத்தையே அவர் மீறுகிறார், வேடிக்கையான வரவு செலவுத் திட்டமொன்றை சமர்ப்பித்த அவர் அதன் பிரகாரமே செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார். 

தேர்தல் காலத்தில் அவர்களை முடிசூடும் தரத்திற்கு உயர்த்தி வைத்தவர்கள் அவர்களின் தேவைகள் நிறைவேறிய பின்னர் அவர்களை இவ்வாறு அவமதித்து நடத்துவது அரசாங்கத்தின் நன்றி கெட்ட செயற்பாடு என்பதால் அவை குறித்து நாம் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. 

⏺கொரோ உள்ளிட்ட பேரிடர்களை சந்தித்த காலத்தில் அரச சேவை பாராட்டத்தக்கது மற்றும் விலை மதிப்பற்ற செயற்பாடுகள் என்று கூறி அவர்களை பாராட்டிய அரசாங்கம், பேரழிவு முடிவதற்குள் அனைத்தையும் மறந்து செயற்படுகின்ற அரசாங்கம் அவர்களை நாட்டுக்கு சுமையாகக் கருதுவது அரசாங்கத்தின் சந்தர்ப்பவாத செயற்பாட்டை எடுத்துக்காட்டுகின்றது.

⏺கொரோனா வைரஸ் தொற்றை எதிர்நோக்கியுள்ள இந்த நிலையில், சுகாதாரம், பாதுகாப்பு, போக்குவரத்து, தபால், சதொச, சமுர்த்தி, கிராம உத்தியோகத்தர், பொது சுகாதார பரிசோதகர்கள், குடும்பம் சுகாதார உத்தியோகத்தர்கள்  உள்ளிட்ட பல துறைகளில் உள்ள ஊழியர்களும்  அரச நிர்வாகத் தலைவர்கள் மற்றும் அரச ஊழியர்களும் அவர்களின் கடமைகளை சரியான முறையில் நிறைவேற்ற  நாடு இன்று எதிர்நோக்கும் சிக்கல்கள் எதிர்பாராததாக அமையும்.

எவ்வாறாயினும், எந்தவொரு முகாமைத்துவமின்றிய வேலைத்திட்டங்களின் ஊடாக தன்னிச்சையாக அரச நிறுவனங்களுக்கு ஆட்சேர்ப்புகளை மேற்கொண்டது யார் என்பது முழு நாட்டிற்கும் தெரியும். 


⏺சுபிட்சத்துக்கான நோக்கு வேலைத்திட்ட வாக்குறுதியின் பேரில், ஒரு இலட்சம் பேரை அரச சேவையில் இணைத்துக் கொண்டனர். மேலும், 50,000 பட்டதாரிகளையும் இணைத்துக் கொண்டனர். இதன் விளைவாக, இது வரையும் அரச வரி வருமானத்தில் 47 வீதமானவை சம்பளம் மற்றும் ஓய்வூதியமாக கணிப்பிடப்பட்டாலும் அது தற்போது 86 வீதமாக அதிகரித்துக் காணப்படுகின்றது. நாட்டின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அரசியல் அதிகாரத்தை மேம்படுத்திக் கொள்ளும் நோக்கில் தன்னிச்சையான நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக எந்த வித திட்டமிடலும் இல்லாமல் அரச சேவையில் நபர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மேற்கொண்ட செயற்பாட்டின் விளைவுகளை இன்று நாடு அனுபவிக்க வேண்டியுள்ளது.

⏺அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயதெல்லையை 65 ஆக உயர்த்துவதாக வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டமையானது இந்த சிக்கல்களை மேலும் அதிகரிக்கும்.

இவையனைத்தும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் தன்னிச்சையான, சந்தர்ப்பவாத நடவடிக்கைகளே அன்றி திட்டமிட்ட நடவடிக்கைகள் அல்ல.

ஓவ்வொருவருக்கும் பொருந்தாத அடிப்படையில் அபத்தமான கொள்கைகளை தயாரித்துக்கொண்டு அதனைக் காரணமாக வைத்து அரச சேவையை சுமை என்று கூறுவது அரசாங்கமேயன்றி வேறு யாரும் அல்ல.

அரசாங்கம் உடனடியாக என்ன செய்ய வேண்டும்?

⏺பொதுச் சேவை சீர்திருத்தங்களுக்கான துணைக் குழுவின் அறிக்கையின்படி, பயனுள்ள பொது நிறுவனங்களை வலுப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

விளைதிறனை மேம்படுத்த பொது நிர்வாகக் கொள்கை மற்றும் கட்டமைப்பை மாற்ற வேண்டும்.

⏺கொள்கைகள் மற்றும் திட்டங்களை திறம்பட உருவாக்குவதோடு மதிப்பீடு செய்வதை உறுதி செய்யும் பொது நிர்வாக அமைப்பை உருவாக்குதல், மற்றும் நவீனத்துவத்திற்கு ஏற்ப, தொழில்நுட்ப மற்றும் திட்டமிட்ட முறையில் அரச நிறுவனங்களின் செயல்பாட்டை மறுவடிவமைப்பு மேற்கொள்வதேயாகும்.

இவை எதற்கும் கவனம் செலுத்தாமல்,

தன்னால் ஏற்ப்பட்ட பிழைகளுக்காக இந்த நாட்டில் உள்ள அரச ஊழியர்கள் மீது குற்றங்களை சுமத்துவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் வெட்கமற்ற முயற்சிக்கு எமது வன்மையான எதிர்ப்பை தெரிவிக்கிறோம்.

தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர செயற்ப்பாட்டு ரீதியாக பங்களித்தோடு முக்கிய வகிபாகமொன்றை மேற்கொண்டவர்கள் இந்நாட்டில் பெரும்பான்மையாகவுள்ள அரச ஊழியர்களே என்பதோடு,அந்த அறிக்கை மூலம் இலக்கு வைக்கப்பட்டு அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பலத்த ஒரு உள்ளார்ந்த அடியாகவே நாம் இதை பார்க்கிறோம்.

சஜித் பிரேமதாச - எதிர்க்கட்சித் தலைவர்

1 கருத்துரைகள்:

அரச ஊழியர்களுக்கு இந்த கெதி கட்டாயம் வரவேண்டும். யஹபாலனவின் அனைத்து வாய்ப்புகளையும் வரப்பிரசாதங்களையும் பெற்றுக் கொண்டு பொஹட்டுவக்கு வாக்குகளை வழங்கிய இந்த அரச ஊழியர்களுக்கு சரியான பாடம் புகட்டப்பட வேண்டும்.

Post a Comment