Header Ads



பாடசாலை அதிபர்களுக்கான Mini MBA பாடநெறி அங்குரார்ப்பணம்


ஸம் ஸம் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கல்வித்துறையில் கடமையாற்றும் அதிகாரிகள்,பாடசாலை அதிபர்கள், உப அதிபர்கள் என தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான Mini MBA பாடநெறியின் அங்குரார்ப்பண நிகழ்வு  கொழும்பில் நடைபெற்றது. 

இப் பாடநெறி சிங்களம் மற்றும் தமிழ் மொழிமூலம் ஒரு வருடகாலத்திற்கு நடைமுறைக் கல்வியை மையப்படுத்தி நிபுணத்துவ உள்ளீட்டுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது."மினி-எம்.பி.ஏ" என்பது வணிக நிர்வாகத்தின் அடிப்படைகளை மையமாகக் கொண்ட கல்விசார் அல்லாத, நிர்வாகப் பயிற்சித் திட்டமாகும். இந்தத் திட்டம் வணிகத்தைப் பற்றிய அறிமுக வழங்குவதோடு மாணவர்கள் மற்றும் தொழில்வாண்மையாளர்களை தேடலுக்குத் தயார்படுத்துவதோடு இத்துறை பற்றிய அடிப்படைப் புரிதலை வழங்க முற்படுகிறது. 

இலவசமாக வழங்கப்படும் இப் பாடநெறிக்கு மத்திய மாகாணக் கல்வித் திணைக்களத்துடன்  இணைந்து போட்டித் தேர்வு மூலம் அதிபர்கள் தெரிவு செய்யப்பட்டதோடு முன்னோடித் திட்டமான இம் முயற்சி,  கல்வித் துறையில் எதிர்காலத் தலைவர்களை வளர்க்கும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படுகிறது.

இந்நிகழ்வில் நீதி அமைச்சர் அலி சப்ரி, பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர். ரஞ்சித் பண்டார, மத்திய மாகாண கல்வித் துறை பணிப்பாளர் திரு. அமரசிரி பியதாச , மேலதிக பணிப்பாளர்களான எம். ஸாருதீன் மற்றும் சம்பிகா மாயாதுன்ன, கலாநிதி. கல்கந்தே தம்மானந்த தேரர், அருட்தந்தை. ஆசிரி பெரேரா உட்பட சமூகத் தலைவர்கள், தனவந்தர்கள், நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

ஸம் ஸம் நிறுவனத்தின் தலைவர் முப்தி. யூசுப் ஹனிபா,சப்ரகமுவப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர்.எம். அஸ்லம் ஆகியோரும் இந் நிகழ்வில் உரை நிகழ்த்தினர்.

இந்த திட்டம் நீண்ட கால அடிப்படையில் இலங்கையில் கல்வி நிருவாகிகளின் தரமான வளர்ச்சிக்கு பங்களிக்கும் என ஸம் ஸம் நிறுவனம் நம்புகிறது.


Insaf salahudeen

No comments

Powered by Blogger.