Header Ads



இலங்கையில் கொவிட் நோயாளிகளை குணப்படுத்த, ஓமானிலுள்ள இலங்கைத் தூதரகத்தால் ICU கட்டில்கள் அன்பளிப்பு


ஓமானுக்கான இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மஸ்கட்டிலுள்ள இலங்கைத் தூதரக உத்தியோகத்தர்கள், வங்கி மற்றும் QS தொழிற்றுறை சார்ந்த இலங்கை சமூகத்தினர் இலங்கை அரச வைத்தியசாலைகளில் கொவிட் நோயாளிகளை குணப்படுத்துவதற்காக தீவிர சிகிச்சைக்கான ஐந்து நவீன படுக்கைகளை (ICU beds) அன்பளிப்பு செய்துள்ளனர். 

இந்த ஐந்து அவசர சிகிச்சைக்கான படுக்கைகளும் வெளிவிவகார அமைச்சுன் செயலாளர் அட்மிரல் ஜயந்த கொலம்பகே அவர்களினால் உற்பத்தி, வழங்கல் மற்றும் மருத்துவக் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன அவர்களிடம் அண்மையில் கையளிக்கப்பட்டது. அவசர சிகிச்சைக்கான இந்த ஐந்து படுக்கைகளும் பதவிய, நுவர எலிய, மஹியங்கன, மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவு ஆகிய நாட்டின் பல பாகங்களிலுள்ள இலங்கை அரச தள வைத்தியசாலைகளுக்கு வழங்கப்படவுள்ளன. 

தாய்நாட்டில் கோவிட் தொற்றினால் அவதியுறும் நோயாளிகளைக் குணப்படுத்துவதற்காக நாட்டுக்கு மிகத்தேவையான ஒரு தருணத்தில் அவசர சிகிச்சைக்கான நவீன படுக்கைகளை தனது வேண்டுகோளுக்கிணங்க அன்பளிப்புச் செய்த தொழிற்றுறை சார்ந்த ஓமான் வாழ் இலங்கை சமூகத்துக்கு தனது மனமார்ந்த நன்றிகளை இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் தெரிவித்தார்.  மனாஸ் ஹுசைன்

1 comment:

  1. நல்லதைச்செய்!இந்தநாட்டில் நன்றியைமட்டும் எதிர்பாராதே!

    ReplyDelete

Powered by Blogger.