Header Ads



'கலாசாரங்களுக்கிடையே சமாதானம், மதங்களுக்கிடையே புரிதல்' எனும் தொனிப்பொருளில் G 20 மாநாட்டில் உரையாற்றும் பிரதமர்


ஜி20 சர்வமத மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட இலங்கை தூதுக் குழுவினர் இன்று (10) பிற்பகல் அந்நாட்டின் போலோக்னா குக்லியெல்மோ மார்கோனி விமான நிலையத்தை சென்றடைந்தனர்.

அதனை தொடர்ந்து கௌரவ பிரதமர் உள்ளிட்ட தூதுக்குழுவினரை இத்தாலியின் அரச அதிகாரிகள் மற்றும் இத்தாலிக்கான இலங்கை தூதுவர் அலுவலகத்தின் அதிகாரிகள் ஆகியோர் வரவேற்றனர்.

ஜி20 சர்வமத மாநாடு 2021  நாளை மறுதினம் (12) போலோக்னா நகரில் ஆரம்பமாகவுள்ளது.

மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் தலைமை உரை ஆற்றுமாறு கிடைத்த அழைப்பொன்றிற்கு அமைய பிரதமர் இவ்விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளார்.

'கலாசாரங்களுக்கிடையே சமாதானம், மதங்களுக்கிடையே புரிதல்' எனும் தொனிப்பொருளில் இம்முறை மாநாடு இடம்பெறவுள்ளது.

இவ்விஜயத்தின் போது கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இராஜதந்திர சந்திப்புகளிலும் கலந்து கொள்ளவுள்ளார்.

குறித்த இராஜதந்திர சந்திப்பின்போது இத்தாலி ஜனாதிபதி கௌரவ மரியோ ட்ராகி (Mario Draghi), ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தலைவர் கௌரவ டேவிட் சசோலி (David Sassoli ) மற்றும் ஸ்லோவேனியா ஜனாதிபதி பொருட் பாஹோர் (Borut Pahor) உள்ளிட்டோரை சந்திக்கவுள்ளார்.

பிரதமர் ஊடக பிரிவு

4 comments:

  1. Only words.in practical opposit

    ReplyDelete
  2. கலாசாரங்களுக்கிடையே நல்லுணர்வு,மதங்களுக்கிடையே புரிந்துணர்வு பற்றி உலக அரங்கில் போதனை செய்ய இலங்கைப் பிரதமர் இத்தாலி சென்றுள்ளார்.மரணித்த முஸ்லிம்களின் உடல்களை அவர்களின் மத, காலாசார கடமைப்பாடுகளுக்கு அப்பால் அவர்களின் எதிர்ப்புகளையும் துச்சமாக மதித்து அனைத்தையும் பற்றி எரித்து உலக மட்டத்தில் எதிர்ப்பையும் உலகளாவிய குரோதத்தை சம்பாதித்து சில மாதங்களில் முழு உலகுக்கும் மதங்கள்,கலாசாரங்கள் பற்றிய பரஸ்பர புரிந்துணர்வு பற்றி போதிப்பதற்கு மேற்கத்திய நாடுகளின் அமைப்பு இவரைத் தெரிவு செய்திருக்கின்றது. முகஸ்துதியும், நயவஞ்சகமும் உலகில் எவ்வளவு தூரம் ஆழமாக ஊன்றியிருக்கின்றது என்பதை விளங்குவதற்கு இதைவிட சிறந்த உதாரணம் உண்டோ.

    ReplyDelete
  3. தன்னுடைய பிச்சைப் பாத்திரத்தை நீட்டினால், இத்தாலிய சனாதிபதியும் ஸ்லோவேனிய சனாதிபதியும் நிச்சியம் மாட்டிக் கொள்வார்கள். சிலவேளை ஐரோப்பிய பாராளுமன்றத் தலைவர் தப்பக்கூடும்.

    ReplyDelete
  4. இடிப்பது சிவன் கோயில் ...

    ReplyDelete

Powered by Blogger.