Header Ads



ஜனாதிபதியின் முதியோர் தினச்செய்தி


கடந்த காலத்தில் நமது முன்னோர்கள் எடுத்த பல  தொலைநோக்கு முடிவுகளின் விளைவுகளையே இன்று நாம் அனுபவித்து வருகிறோம் என்று நம்புகிறேன். அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட மூத்தத் தலைமுறையினர் அனைவருக்கும், என்னுடைய இதயபூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

உலகத் தொற்றுப் பரவல் நிலைமைக்கு மத்தியில், எமது மூத்தத் தலைமுறையினரைப் பாதுகாப்பதற்காக நாம் முன்னெடுத்த கலந்துரையாடல்கள், திட்டமிடல் நடவடிக்கைகளின் ஊடாக, இன்று சாதகமான பயன்கள் கிடைக்கப்பெற்றுள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது. 

அனைத்து மக்களினதும் உயிருக்கான பாதுகாப்பை அளிப்பது போன்றே, மூத்த தலைமுறையினரின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பதும் கட்டாயமாகிறது. இன்றைய நிலையில், உரிய சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைபிடித்து, சமூக இடைவெளியைப் பேணுவது அத்தியாவசியமாகிறது. நாடு எதிர்நோக்கியிருக்கும் கொவிட் தொற்றுப் பரவலுக்கு மத்தியில், மூத்த தலைமையினர் என்ற ரீதியில், உங்களுடைய கடமையும் பொறுப்பும் அதுவேயாகும். 

“அனைத்து வயதுப் பிரிவினருக்கும் ஒரே மாதிரியிலான டிஜிட்டல் தொழில்நுட்பம்” என்ற இம்முறை தொனிப்பொருளுக்கமைய, உலகம் புதிய தொழில்நுட்பத்தினூடாகத் தொடர்பாடல்களை மேற்கொள்ளும் சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. அவ்வாறான சமுதாயத்துக்குள், இலங்கை வாழ் மூத்த தலைமுறையினரும் இணைந்துச் செயற்படச் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். இன்றைய உலகில் வாழும் நீங்கள், டிஜிட்டல் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும்.

மூத்தத் தலைமுறையினராகிய நீங்கள் எதிர்கொள்ளக்கூடிய அனைத்து வகையான பாதகமான அனுபவங்களுக்குமான நிலையான தீர்வுகளை, “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அடைந்துகொள்ள வேண்டும். அதில், முதிர்வயதை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கத் தேவையான வசதிகளுடன் கூடிய சமூகப் பாதுகாப்பு வேலைத்திட்டமொன்று காணப்படுதோடு, வேறு நபர்களில் அவர்கள் தங்கியிருப்பதைக் குறைத்து, சுயமரியாதையுடன் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதே, எமது அரசாங்கத்தின் குறிக்கோளாக இருக்கின்றது. 

மூத்த தலைமுறையினரான உங்கள் அனைவருக்கும், ஆரோக்கியமான வாழ்க்கை அமையப் பிரார்த்திக்கிறேன்.  

கோட்டாபய ராஜபக்ஷ 

2021 செப்டெம்பர் 30ஆம் திகதி

No comments

Powered by Blogger.