Header Ads



இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து விலகிய கப்ரால் உடனடியாக ஆளுநராக ஜனாதிபதியினால் நியமனம் - கடுமையாக விமர்சிக்கிறார் பண்டாரிகொட


முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், எதிர்வரும் 15ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் மத்திய வங்கியின் ஆளுநராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். 

மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட உள்ள அஜித் நிவாட் கப்ரால் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் காணப்படுவதாகத் தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொட, கப்ராலால் நாட்டுக்கு 2,100 மில்லியன் நட்டம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

இதுத் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், நிதி இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து விலகி எவ்வாறு மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட உள்ளார் என அவர் இதன்போது வினவியதோடு, அஜித் நிவாட் கப்ரால் மீது பல்வேறுக் குற்றச்சாட்டுக்கள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் இருந்தபோது நாட்டுக்கு 2,100 மில்லியன் ரூபாய் நட்டத்தை அவர் ஏற்படுத்தியிருந்தார். இவ்வாறான ஒருவர் மீண்டும் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்படுவது மோசமான செயல் எனவும் அவர் தெரிவித்தார்.

1 comment:

  1. சிங்கப்பூரின் மத்திய வங்கி ஆளுனர் Heng Swee Keat, 49 வயதுடையவர் அமைச்சரை அமைச்சர் அந்தஸ்த்துள்ள ஒரு கவனர்னர் என அஜித் நிவாட் கப்ரால் பெரும் பொய்யுரைத்தார். Heng Swee Keat ஒரு போதும் அமைச்சர் அந்தஸ்த்து அவருக்கு இல்லை. அவர் ஆரம்பத்தில் பொலிஸ் அதிகாரியாகக் கடமை செய்தவர். பொருளாதாரத்தில் அமெரிக்க ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டமாணி பட்டம் பெற்ற அவர் அத்துறையில் மேலும் பல உயர்கல்வி கற்றவர். அத்துடன் ஐஎம்எப் போன்ற நிறுவனங்களிலும் உயர் பதவி வகிப்பவர்.

    ReplyDelete

Powered by Blogger.