Header Ads



மக்கள் நெருக்கடி நிலையை சமாளிக்க பழக வேண்டும், பொருட்களின் விலை குறையாது, எப்போது தட்டுப்பாடு ஏற்படுமென்று தெரியாத அச்சுறுத்தலில் உள்ளோம்


நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் நாட்டின் தற்போதைய நிலையில் பொருட்களின் விலை குறையாது. குறைக்கவும் முடியாது.

மக்கள் தற்காலிக நெருக்கடி நிலைமைகளை சமாளிக்க பழகிக்கொள்ள வேண்டும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

எந்த நேரத்தில் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும், எப்போது மருந்து தட்டுப்பாடு ஏற்படும் என்பதே தெரியாத அச்சுறுத்தல் நிலையில் உள்ளோம் எனவும் அவர் கூறினார்.

நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு ஏற்படப்போவதாக பொருளாதார நிபுணர்கள், அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற நிலையில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

- வீரகேசரி - 

1 comment:

  1. அப்படி என்றால் நீ என்ன புடுங்கவா இருக்கிறாய்

    ReplyDelete

Powered by Blogger.