Header Ads



குண்டுத்தாக்குதல் நிச்சயம் நடத்தப்படும் என்று, ஞானசாரர் உறுதியாக குறிப்பிடவில்லை - பொதுபல சேனா


தேசிய பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டால் ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலை போன்ற பிறிதொரு அடிப்படைவாத தாக்குதல் இடம் பெறலாம்.

ஆகவே பாதுகாப்பை பலப்படுத்துமாறு பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞாசனார தேரர் குறிப்பிட்டாரே , தவிர குண்டுத்தாக்குதல் நிச்சயம் நடத்தப்படும் என்று உறுதியாக  குறிப்பிடவில்லை. என பொதுபல சேனா அமைப்பின் ஊடக பிரிவு குறிப்பிட்டது.

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதலை போன்று  மற்றுமொரு குண்டுத்தாக்குதல் இடம்பெற போவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் ஒருபோதும். குறிப்பிடவில்லை. குறிப்பிடாத விடயம் ஊடகங்களினால் திரிபுப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்விடயம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்க ஞானசார தேரர் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவார். இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்கள் தடை செய்யப்பட வேண்டும்.

என்பதை அவர் ஜனாதிபதிக்கு எழுத்து மூலமாக வலியுறுத்தியுள்ளார், என பொதுபல சேனா அமைப்பின் ஊடாக பிரிவி குறிப்பிட்டது. Virakesari.

1 comment:

  1. This Gnanasara thero wants the so-called Muslim Fundamentalist organisations banned.

    What should be Banned, FIRST and FOREMOST, are the Buddhist Fundamentalist Organisations like the Bodhu Bala Sena which were responsible for several Terrorist Attacks against Muslims in various parts of the country beginning 2014.

    ReplyDelete

Powered by Blogger.