Header Ads



ஒக்டோபர் வரை நாட்டை முடக்கினால், ஆயிரக்கணக்கில் உயிர்களை காப்பாற்றலாம் - நிபுணர்கள் குழு


ஒக்டோபர் இரண்டாம் திகதி வரை நாட்டை முடக்கினால் ஆயிரக்கணக்கில் உயிர்களை காப்பாற்றலாம்- உலக சுகாதார ஸ்தாபனத்துடன் தொடர்புடைய நிபுணர்கள் குழு 

நாட்டை ஒக்டோபர் இரண்டாம் திகதி வரை முடக்கவேண்டும் என உலக சுகாதாரஸ்தாபனத்துடன் தொடர்புடைய நிபுணர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நாட்டை ஒக்டோபர் இரண்டாம் திகதி வரை முடக்கவேண்டும் அல்லது செப்டம்பர் 18 ம் திகதி வரை  முடக்கவேண்டும் அவ்வாறு செய்தால் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றமுடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆகஸ்ட் 31 ம் திகதி வரை முடக்கல் நிலையை நீடிப்பதால் கொரோனா வைரஸ் உயிரிழப்புகளை குறைக்கமுடியும், நாட்டை ஒக்டோபர் இரண்டாம் திகதி வரை அல்லது செப்டம்பர் 18ம் திகதி  வரை முடக்கினால் 7500 முதல் 10,000 ஆயிரம் உயிர்களை காப்பாற்ற முடியும் என உலக சுகாதார ஸ்தாபனத்துடன் தொடர்புடைய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நான்கு முதல் ஆறு வாரங்களிற்கு நாட்டை முடக்கவேண்டும் என  நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

இவ்வாறு நாட்டை முடக்குவதன் மூலம் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக  தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை சிறப்பாக பூர்த்தி செய்ய முடியும் என வைத்தியர் பாலித அபயக்கோன் தலைமையிலான நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக டெல்டா கொரோனா வைரஸ் காணப்படும் சூழமைவினை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாட்டை முடக்குவதன் மூலம் சுகாதாரதுறையினர் தற்போதைய அழுத்தங்களில் இருந்து மீள்வதற்கான சந்தர்ப்பம் கிட்டும்,தற்போது மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறையும் ஒக்சிசன் பற்றாக்குறையும் காணப்படுகின்றது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆராயப்பட்ட மாதிரிகளில் 90 வீதமானவை டெல்டா வைரஸ் மேல்மாகாணத்திற்கு வெளியே பரவியுள்ளதை உறுதி செய்துள்ளன என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சுகாதார பணியாளர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர், மருத்துவமனைகள் நிரம்பிவிட்டன,முக்கியமான ஒக்சிசனிற்கு தட்டுப்பாடு காணப்படுகின்றது,வைரஸ் வீடுகளிற்குள்ளேயே பரவிவிட்டது என நிபுணர்கள் சுட்டிக்காட்யுள்ளனர். TL

No comments

Powered by Blogger.