Header Ads



கோடிக் கணக்கான பணத்தை சமூகப் பணிகளுக்காக அள்ளி இறைத்துவிட்டு அல்லாஹ்வின் பால் சென்றுவிட்ட மாமனிதர் ரிபாய் ஹாஜியார்


ரிபாய் ஹாஜியாரின் ஸதகதுல் ஜாரியா

அஷ்ஷெய்க் பளீல்

கோடிக் கணக்கான பணத்தை சமூகப் பணிகளுக்காக அள்ளி இறைத்து விட்டு அல்லாஹ்வின் பால் சென்றுவிட்ட  மாமனிதர் ரிபாய் ஹாஜியாரது ஸதகா ஜாரியாக்களை அல்லாஹ் அங்கீகரித்து மிக உயர்ந்த வெகுமதிகளை அன்னாருக்கு வழங்குவானாக! 

அவர் பல பாடசாலைகளுக்கு கடடங்களை கட்டிக் கொடுத்தார்.

ஏழை எளியவர்களுக்கு வீட்டு வசதி, தண்ணீர் வசதி,மின்சார வசதி, புலமைப் பரிசில்கள் என்று அவரது சமூக மேம்பாட்டுப் பணிகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

பேருவளை மண்ணில் உதித்த இரு கொடை வள்ளல்கள்:-

1. எமது அறிவுத் தந்தை கொடை வள்ளல் அல்ஹாஜ் நளீம்

2. மற்றொரு கொடை வள்ளல் ரிபாய் ஹாஜியார்

இருவரும் புத்திசாலித்தனமான முதலீட்டை செய்து விட்டு வபாத்தாகியிருக்கிறார்கள்.

அவ்விருவரை விடவும் பல மடங்கு பணக்காரர்கள் இலங்கையில் இருக்கிறார்கள்; இருந்தார்கள். ஆனால், அவர்கள் உழைத்ததற்கும் இவர்கள் உழைத்ததற்கும் இடையில் மலைக்கும் மடுவுக்கும் இடையிலான வித்தியாசம் இருந்தது.

இவர்கள் இருவரும் தமது சொத்து செல்வங்களை அல்லாஹ் தந்த பாக்கியங்களாக மாத்திரமன்றி சோதனைகளாகவும் கருதினார்கள். மக்களது துன்பங்களை தமக்கு ஏற்பட்ட துன்பங்களாகக் கருதினார்கள்; அன்பாகப் பார்த்தார்கள். இவ்விருவரையும் உலகம் உள்ளளவும் சமூகம் நினைக்கும்; துஆச் செய்யும்.

இலங்கை முஸ்லிம் சமூகத்துக்கு மட்டுமன்றி இலங்கை வாழ் ஏனைய சமூகத்தவர்களுக்கும் இவர்களது சேவைகள் வியாபித்திருந்தன.

இலங்கை முஸ்லிம் சமூகத்தில் இவர்களைப் போன்ற இன்னும் பல தனவந்தர்கள் சமூகத்தில் இருந்ததனால் தான் இன்று நாம் பல வக்பு சொத்துக்களை  காணுகிறோம்.

இன்ஷா அல்லாஹ் இரு பாக்கியங்களை அடைந்த சீதேவிகள்:-

1. அவர்களது நாமங்கள் மறுமை வரை உச்சரிக்கப்படும். துஆக்கள் கிடைக்கும்.

2. அல்லாஹ்விடம் மிகப் பிரமாண்டமான கூலிகள் கிடைக்கும்.

இவர்கள் தமக்காக வாழுவதை விட பிறருக்காக வாழ்ந்தவர்கள்.

அல்லாஹ் ரிபாய் ஹாஜியார் அவர்களையும் ஏனைய எல்லா கொடை வள்ளல்களையும் பொருந்திக் கொண்டு அவர்களுக்கு உயர்தரமான சுவர்க்கத்தை வழங்குவானாக!

سبع يجري للعبد أجرهن وهو في قبره بعد موته :من عَلّم علماً, أو أجرى نهراً , أو حفر بئراً , أو غرس نخلاً , أو بنى مسجداً , أو ورّث مصحفاً , أو ترك ولداً يستغفر له بعد موته.

 حسنه الألباني رحمه الله في صحيح الجامع برقم :3596

நபி(ஸல்) கூறினார்கள்:

"யார் ஓர் அறிவை கற்று கொடுக்கிறாரோ,

அல்லது ஓர் ஆற்றை ஓட வைக்கிறாரோ, 

அல்லது ஒரு கிணற்றை தோண்டுகிறாரோ, 

அல்லது ஒரு ஈத்த மரத்தை நாட்டுகிறாரோ,

அல்லது பள்ளியை கட்டுகிறாரோ, 

குர்ஆன் பிரதியை விட்டுவிட்டு செல்கிறாரோ,

அல்லது தனது மரணத்திற்கு பின்னால் தனக்காக பிழை பொறுக்கும் ஒரு பிள்ளையை விட்டுவிட்டு செல்கிறாரோ,

இந்த ஏழு காரியங்களது நன்மைகள் அடியானுடைய மரணத்திற்குப் பின்னாலும் அவன் கப்றில் இருக்கும் போது வந்து கொண்டேயிருக்கும்.

1 comment:

Powered by Blogger.