Header Ads



தலிபான் அமைப்பை தடை செய்தது பேஸ்புக்


தலிபான் ஆதரவு பதிவுகளுக்கு தடைவிதித்துள்ள பேஸ்புக், அந்த அமைப்பை தடை செய்திருப்பதாகவும் அறிவித்துள்ளது.

தலிபான்களுக்கு ஆதரவான அனைத்து விதமான உள்ளடக்கங்களையும் தடை செய்வதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

தலிபான் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பு என்று கருதுவதால், இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.

தலிபான்களுடன் தொடர்புடைய பதிவுகளை கண்காணிக்கவும் அகற்றவும் ஆப்கானிஸ்தான் வல்லுநர் குழு ஒன்றை பேஸ்புக் நியமித்துள்ளது.

தகவல் பரிமாற்றத்திற்காக பல ஆண்டுகளாக தலிபான் அமைப்பினர் சமூக ஊடகங்களை பயன்படுத்தி வந்தனர்.

அமெரிக்க சட்டத்திற்கமைய, தலிபான் ஒரு பயங்கரவாத அமைப்பாக வகைப்படுவதாகவும் தமது அபாயகரமான அமைப்பு கொள்கைக்கு அமைய இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பேஸ்புக் கூறியுள்ளது.

அவ்வமைப்பு, அது சார்பான கணக்குகள் அகற்றப்படுவதுடன், அதன் புகழ் பரப்பும், ஆதரவளிக்கும் பதிவுகள் தடை செய்யப்படும் என பேஸ்புக் நிறுவனத்தின் பேச்சாளர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.