Header Ads



செயல் இழக்கும் நிலையில் ராகம வைத்தியசாலை, சமாளிக்க முடியாத நிலை


இராகம மருத்துவமனை செயல் இழக்கும் நிலையை எட்டியுள்ளதுஇங்கு 500 கொரோனா நோயாளர்களிற்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றது, இவர்களில் பலர் மெத்தைகளுடன் மருத்துவமனைகளின் தாழ்வாரங்களில் காணப்படுகின்றனர் தங்களிற்கு மருத்துவமனை கட்டில் கிடைப்பதற்காக காத்திருக்கின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அகற்றாமல் மருத்துவமனைகளின் தாழ்வாரங்களில் வைத்திருக்கின்றனர் என சில நோயாளிகள் முறைப்பாடு செய்துள்ளனர்.

ராகம மருத்துவமனையின் கழிவறைகள் வசதிகள் மோசமானவையாக காணப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எங்களது மருத்துவமனையே ஒரேயொரு போதனா வைத்தியசாலை கடந்த ஒரு வருடமாக இங்கு அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது எங்கள் நான்கு வோர்ட்களை கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக ஒதுக்கியுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் மருத்துவமனையின் 26 முதல் 30ம் வோர்ட்களை நாங்கள் நாளாந்தம் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகளிற்காக ஒதுக்கியுள்ளோம்நாங்கள் இவர்களை மூன்று பிரிவுகளாக பிரித்து அவர்கள் அனைவரையும் துரித அன்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்துகின்றோம்இதன் பின்னர் சிறிதளவு அறிகுறிகளை வெளிப்படுத்தியவர்களை வீடுகளிற்கு செல்லுமாறு கேட்டுக்கொள்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடும் அறிகுறிகளை வெளிப்படுத்துபவர்களை கந்தானை மினுவாங்கொட பகுதியில் உள்ள மருத்துவமனைகளிற்கு அனுப்பிவைக்கின்றோம்ஏனையவர்களை ஏழாம் வோர்ட்டில் அனுமதித்து கட்டில்களின் அடிப்படையில் அவர்களை அங்கு அனுப்பிவைக்கின்றோம் எனவும் மருத்துவர் தெரிவி;த்துள்ளார்.

வோர்ட்கள் 26 முதல் 30 வரை கேள்வி எழுப்பியவேளை ராகம மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் லியனகே ரணசிங்க 26 வது வோர்ட்டில் 24 கட்டில்கள் மாத்திரம் காணப்படுகின்றன ஆனால் 83 கொரோனா நோயாளிகள் காணப்படுகின்றனர் 30வது வோர்ட்டில் 28 கட்டில்கள் காணப்படுகின்றன ஆனால் 57 கொரோனா நோயாளிகள் உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நெருக்கடி காரணமாக நாங்கள் நோயாளிகளை மருத்துவமனையின் தாழ்வாரங்களில் தங்கவைக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என குறிப்பிட்டுள்ளலியனகே ரணசிங்க ் அச்சம் தரும் வகையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் எங்களால் சமாளிக்க முடியாத நிலை காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த மருத்துவமனையில் ஏனைய நோய்களினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களிற்கும் சிகிச்சை அளிக்கின்றோம் என்பதை மறக்ககூடாது நாங்கள் கொரோனா குறித்து மாத்திரம் கவனம் செலுத்த முடியாது இந்த நோயாளிகளை வேறு மருத்துவமனைகளிற்கு அனுப்ப முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் இந்த தாங்கிக்கொள்ள முடியாத நிலைமை குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளோம்நிலைமை கட்டுப்பாட்டை மீறினால் மேலும் சில வோர்ட்களை மூடிவிட்டு அதனை கொவிட் நோயாளிகளிற்கு ஒதுக்கவேண்டிய நிலைமை ஏற்படும் எனராகம மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் லியனகே ரணசிங்க.

மக்கள் எங்களை விமர்சிக்கின்றார்கள் வீடியோக்களை எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிடுகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். (தினக்குரல்)

2 comments:

  1. எல்லாம் அவன் செயல்.

    ReplyDelete
  2. Unknownக்கு ஒரே பதில் இல்லை.மனிதர்கள் செய்யும் அட்டகாசங்களும், கவலையீனம், போக்கிரித்தனத்தின் விளைவு தான் இது. மனிதனின் அகங்காரம், பொடுபோக்கு,அலட்சியத்தனம்,மனிதர்களை மதிக்காக நடத்தை போன்ற கெட்ட நடத்தைகளின் விளைவுகள் தென்படும் போது அவற்றுக்கு எல்லாம் அவன் செயல் என்றால், மனிதனுக்கு இறைவன் கொடுத்த சுதந்திரம், அவனுடைய சுயசிந்தனை ஆகியவற்றை அப்படியே மறுக்கும் செயல் தான் எல்லாம் அவன் செயல் என்பது. மனிதன் உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்துகொண்டால் அவனுக்கு உயர்வும் வாழ்க்ைகயில் சிறப்பும் வரும். அதைவிட்டு எனது இயலாமைக்கும் பொடுபோக்குக்கும் பெயர்தான் எல்லாம் அவன் செயல், மனிதனின் போக்கிரித்தனத்துக்கு இயலாத மனிதன் வைத்துள்ள பெயர் தான் எல்லாம் அவன் செயல். கொஞ்சம் நிதானமாகச் சிந்திந்தால் இந்த உண்மை புலப்படும். இந்த கருத்துக்களில் நிச்சியமாக யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதவில்லை. உண்மையை தௌிவுபடுத்தும் நோக்கத்துடன் மாத்திரம் எழுதுகின்றேன். தவறு ஏற்பட்டால் தயவுசெய்து மன்னியுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.