July 15, 2021

முஸ்லிம் திணைக்களம், வக்பு சபை மீது மஹிந்தவின் முஸ்லிம் விவகார இணைப்பாளர் பாய்ச்சல் - ஜம்மிய்யல் உலமா, முஸ்லிம் அமைப்புக்கள் அமைதி காக்கக் கூடாது என்கிறார்


- இக்பால் அலி -

பள்ளிவாசல்கள் அமைந்துள்ள காணியில் குர்பான் கொடுப்பதற்காக  மாடுகள் அறுப்பதற்கு அனுமதியில்லை  என முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் கீழ் உள்ள  வக்பு சபை எடுத்துள்ள தீர்மானமானது அரசாங்கத்தின் மீது முஸ்லிம்கள் வெறுப்புணர்ச்சியை தூண்டுவதற்காக முன்னெடுக்கப்பட்ட செயற்பாடாக  அமைந்துள்ளது. இத்தீர்மானம்  எல்லோருடனும் கலந்தாலோசித்து  எடுக்ப்பட்டு இருக்க வேண்டும். இது ஒரு பொருத்தப்பாடற்ற தீர்மானகும். இந்த தீர்மானத்திற்கு எதிராக வன்மையான கண்டத்தை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷசின் முஸ்லிம் விவகார இணைப்புச் செயலாளர் அப்துல் சத்தார் தெரிவித்தார்.

அவர் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் 

புனித ஹஜ்ஜுப் பெருநாளைக்காக முஸ்லிம்கள் குர்பான் கொடுக்க தயாராகிக் கொண்டிருக்கும் தருணத்தில் வக்பு சபையினர் திடீரென சுயாதீனமான தீர்மானம் ஒன்றை எடுத்து  பள்ளியில் குர்பான் கொடுக்க முடியாது என்ற அறிக்கையினை வெளியிட்டுள்ளனர். 

பள்ளிகளில் குர்பானை அறுக்கும் போது அதன் கழிவுகளை அகற்றுவதற்கான இடவசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் வீடுகளில் அவ்வாறான நிலைமையில் இலலை. வீடுகளில் அறுக்கும் போது அதன் கழிவுகள் அடுத்த சமூகத்தினருக்கு பெரும் இடையூறாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. தற்போது வக்பு சபையினர் முறையற்ற விதத்தில் தீர்மானம் ஒன்றை          வெளியிட்டுள்ளனர். முஸ்லிம் சமய கலாசார திணைக்களமும் வக்கு சபையும் தனிப்பட்டவர்களுடைய சொந்த அமைப்பு அல்ல. 

இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மக்கள் பிரிதிநிதிகளையோ பாராளுமன்ற உறுப்பினர்களையோ ஆதரவாளர்களையோ  கேட்டு எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல.  முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் கால காலம் தொட்டு முஸ்லிம் மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான நிறுவனமாகும்.  இப்படியாக சமூகம் பிழையாக  வழிநடத்தப்படும் போது பொறுப்பு வாய்ந்த மார்க்க விடயம் சம்மந்தமாக   ஈடுபடும் ஜம்மிய்யல் உலமா மற்றும் ஏனைய  முஸ்லிம் அமைப்புக்கள ;அமைதி காக்கக் கூடாது.  

இது ஒரு ஒவ்வொரு வருடமும்  விசமப் பிரச்சாரத்தை ஏற்படுத்தி அரசாங்கத்தையும் முஸ்லிம்களையும் தூரமாக்க  மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளில் ஒன்றாகவே வக்பு  சபையின் நடவடிக்கை அமைந்துள்ளது. எனவே இந்த தீர்மானத்திற்கு எதிராக வன்மையான  கண்டனத்தை தெரிவிப்பதோடு  இந்த தீர்மானத்தில் இருந்து உடன் விலகிக் கொள்ள  பெற வேண்டும் என்று அவர் மேலும் தொவித்தார்.  

15-07-2021

2 கருத்துரைகள்:

Oh Abdul Sathar, where was he sleeping when covid-19 Muslim dead bodies were burnt?

சபாஷ்!
உங்களுடைய கொள்கையுடன் நான் ஒத்துப்போகவில்லையாயினும் இந்த விடயத்தில் உங்களுடன் இருக்கின்றேன். முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் யாருக்கோ வக்காளத்து வாங்குவதாகத் தோன்றுகின்றது. அவர் இதற்கு முன்பும் மார்க்க விடயங்கள் பலவற்றில் முஸ்லிம்களைக் காட்டிக்கொடுத்திருக்கிறார்.
அப்துல் சத்தார் அவர்களே. ஏன் பார்த்துக்கொண்டிருக்கின்றீர்கள்? இவரை அப்பதவியிலிருந்து அகற்றிவிட்டு. சமுதாய நலன்விரும்பி ஒருவரை அப்பதவிக்கு நியமிக்க உங்களுக்கு முதுகெலும்பு இல்லையா? இதுபோன்ற சமுதாய அக்கறைகொண்ட விடயங்களைத்தான் அரசியில்வாதியான உங்களிடமிருந்து நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

Post a Comment