Header Ads



கொரோனா ஜனாசாக்களில் இருந்து பண மோசடி - 50,000 ரூபாய் வரை அறவீடு - அயோக்கியர்களிடம் ஏமாறாதீர்கள்


சமூக பாதுகாப்பு என்ற போர்வையில் கொவிட் காரண மாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்கள் (சடலங்கள்) ஓட்டமாவடி கல்லறைக்கு அடக்கத்துக்காக கொண்டு செல்லப்படும் போது பண மோசடி நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சமூக சேவைகளை நடத்துதல் என்ற போர்வையில் பல்வேறு பெயர்களில் உருவாக்கப்பட்ட சில அமைப்புகள் இந்தப் பண மோசடியை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

கொவிட் சடலம் ஒன்றை ஓட்டமாவடி கல்லறைக்குக் கொண்டு செல்ல சில முஸ்லிம் அமைப்புகள் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அறவிடுவதாக பல முஸ்லிம்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

இதேவேளை கொவிட் சடலத்தை அடக்கம் செய்வது முற்றிலும் அரசின் செலவில் செய்யப்படும் என சுகாதார அமைச்சின் மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர்  அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.

இவ்வாறு பணத்தைப் பெறுவோர் குறித்து சுகாதார அமைச்சிடம் எழுத்துபூர்வமாக முறைப்பாடளிக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சின் மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் அன்வர் ஹம்தானி கேட்டுக்கொண்டார். 

இது போன்ற நபர்கள் குறித்து முறையான தகவல்களைப் பெற்ற பின்னர், விசாரணைகள் நடத்தப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். Thinakkural

No comments

Powered by Blogger.