July 10, 2021

'பள்ளிவாசல் சம்மேளனங்கள்' சட்டத்துக்கு முரணானது என 2020 இல் வெளியான சுற்றறிக்கைக்கு முஸ்லிம் திணைக்களப் பணிப்பாளரின் விளக்கம்


ஏன் மஸ்ஜித் / பள்ளிச சம்மேளனங்களை ஒழுங்குபடுத்தப்பட் வேண்டும் ? 

02/12/2020 வெளியிடப்பட்ட பள்ளிவாயல் சம்மேளனங்கள் புனரமைக்கப்படுவதற்கான வக்பு சபையின் சுற்று நிரூபம் தொடர்பில் தப்பபிப்பிராயங்கள் நிலவுகின்றன. ஆகவே அவை தொடர்பான சில விளக்கங்களை தர முயற்சிக்கின்றோம். 

முதலில் இது திணைக்களத்தினதோ பணிப்பாளரினதோ தீர்மாணம் அல்ல; மாறாக வக்பு சபை 01.12. 2020 அன்று கூடி எடுத்த தீர்மாணம் என்பதனைச் சொல்ல வேண்டும். வக்பு சட்த்தின் கீழ் உள்ள அதிகாரங்களின் அடிப்படையில் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரினால்  என்மர் கொண்ட ஒரு சபை ஒவ்வொரு மூன்று வருடத்துக்கு ஒரு முறை நியமிக்கப்படுகிறது. எனவே, தற்போது நடைமுறையிலுள்ள வக்பு சபையானது கடந்த வருடம் கெளரவ பிரதமரால் நியமிக்கப்பட்டதாகும். இதன் தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி சப்ரி ஹலீம்டீன் அவர்களும் இன்னும் 6 உறுப்பினர்களுட்பட முஸ்லிம் பள்ளிகள் மற்றும் தர்ம நிதியங்களின் பணிப்பாளரான ஏ.பீ. எம். அஷ்ரப் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். வக்பு சபையின் தீர்மாணங்கள் அறிவிக்கப்படுகின்ற போது இது தெளிவாக குறிப்பிடப்படுவது கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும்; வக்பு சட்டத்தில் பணிப்பாளருக்கு நேரடியாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பாவித்து சில முடிவுகள் எடுக்கப்படுகின்ற போது வக்பு சபையின் முடிவாக அவை அறிவிக்கப்படுவதில்லை என்பதுவும் ஈண்டு குறிப்பிடப்படல் மவண்டும். வக்பு சபையின் தீர்மாணங்களை திணைக்கள உத்தியோகத்தர்கள் நடைமுறைப்படுத்துகின்றனர்.

2020 ஆரம்பப் பகுதியில் திணைக்களத்தின் பணிகளை மாவட்ட மட்டத்தில் ஒருங்கிணைப்பதில் நாம் இரு பெரும் சவால்களை எதிர்நோக்கினோம்:

1. மொத்தமாக 11 மாவட்டங்களில் மாத்திரமே திணைக்களத்தின் கள உத்தியாகத்தர்கள் இருந்தனர்.  ஆகவே, 14 மாவட்டங்களில் திணைக்களம் தனது எந்தவொரு உத்தியோகத்தரோ அல்லது பதில் கடமை புரிவோரோ இன்றியே இயங்கி வந்தது. அத்தகைய சந்தர்ப்பங்களில் பள்ளிவாயல்களின் கூட்டமைப்பொன்றின் அவசியம் உணரப்பட்டது. 

2. ஒரு சில மாவட்டங்களில் மாத்திரமே மாவட்ட மஸ்ஜித் சம்மேளனங்கள் மிகச்சிறப்பாக இயங்கி வந்தன. கொழும்பு, அம்பாறை, கண்டி, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களே அவை. மாத்தளை, காலி ஆகிய மாவட்டங்களில் காணப்பட்ட மாவட்ட சம்மேளனங்களும் ஒரளவுக்கு இயங்கு நிலையில் இருந்தன. ஆனால் பிராந்திய மட்டத்தில் இயங்கிய காத்தாங்குடி, ஓட்டமாவடி, கிண்ணியா, பேருவள போன்ற பிராந்திய சம்மேளனங்கள் பலவும் நல்ல இயங்கு நிலையில் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 

இன்னும் பல மாவட்டங்களில் பள்ளிவாயல் சம்மேளனங்கள் இருந்தாலும் அவை பின்வரும் பிரச்சினைகளை அடையாளப் படுத்தி நின்றன. 

1. வெறுமனே பெயரளவில் இருந்தமை

2. தற்கால பள்ளிவாயல் தர்மகர்த்தாக்களின் பங்குபற்றுதல் இல்லாமல் முன்னாள் தர்மகர்த்தாகளின் பங்குபற்றுதலுடன் இயங்கியமை

3. சில தனி நபர்களால் நடாத்தப்படும் அரச சார்பற்ற நிறவனங்கள் போன்று இயங்கியமை.

4. எந்தவொரு அரச நிறுவனத்தாலும் மேற்பார்வை செய்யப்படாமல் இருந்தமை

5. நிதி திரட்டப்பட்டு செலவுகள் செய்யப்பட்டாலும் வெளிப்படைத்தன்மையற்றவையாக இருந்தமை

6. ஆனால் பள்ளிவாயல் சம்மேளனம் என்ற பெயரில் இயங்கியமை, பள்ளிவாயல் என்ற கண்ணியமான நிறுவனத்தை வில்லங்கத்தில் தள்ள வழிவகுக்கக் கூடிய சாத்தியம் இருந்தமை. 

இதுவல்லாமல், சிறப்பாக இயங்கிய சம்மேளனங்களைப் பொறுத்த மட்டில் பின்வரும் பிரச்சினைகள் இருந்தன.

1. முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் செய்யப்பட்டிருந்த பதிவு முன்னாள் பணிப்பாளரால் ரத்துச் செய்யப்பட்டிருந்தமை.

2. வக்பு சபைக்கு எவ்விதத்திலும் பொறுப்புக்கூறக்கூடிய பொறிமுறை ஒன்றும் இல்லாமல் இருந்தமை. 

மேலே சொல்லப்பட்ட பிரச்சினைகளையும் காரணங்களையும் வக்பு சபை பல மாதங்களாக ஆராய்ந்து மாவட்ட மட்டத்தில் வக்பு சபைக்கு பொறுப்புக் சொல்லக்கூடிய பள்ளிவாயல்களின் கூட்டமைப்பொன்றை உருவாக்கும் நோக்கிலேயே இத்தடை ஏற்பாடு செய்யப்பட்டது என்பதனை கருத்தில் கொள்ளல் வேண்டும். 

இந்த விடயங்கள் சகல மாவட்டங்களிலும் பள்ளியாயல்களை ஒன்று சேர்த்து நடாத்திய கலந்துரையாடல்களினூடாக பள்ளியாயல் தர்ம கர்த்தாக்களுக்கு விளக்கப்பட்டுள்ளன. எனவே கடந்த டிசம்பர் மாதம் எடுக்கப்பட்ட முடிவானது முழுமையாக ஒவ்வொரு மாவட்ட பள்ளிவாயல்களுக்கும் Power Point விஷேட காணொளிக்கூடாக விளக்கப்பட்டது. நேரடியாகவும்  zoom செயலி ஊடாகவும் இத்தகைய விளக்கம் வளங்கப்பட்டுள்ளது. இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் அனுராதபுர நகரில் அமைத்துள்ள மொஹிதீன்  ஜும்மா பள்ளிவாசலில் ஆரம்பித்த இந்தப் பணியினூடாக இது வரையில் 23 மாவட்டங்களில் மாவட்ட பள்ளிவாயல் குழு அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றன. இதுவரையில் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இக்குழு குறித்த மாவட்ங்களில்  சிறப்பாக இயங்கி வருகின்றது. 

ஆனால் பள்ளிவாயல் செயற்பாடுகளில் ஈடுபாடு இல்லாதவர்கள் இந்த உண்மைகளை அறிந்திருக்க வாய்ப்பில்லை.

 விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதும் அதற்கு நாம் விளக்கம் சொல்வதும் இன்றியமையாததே. எனவே எமது இந்தக் குறிப்பு பலரது சந்தேகங்களுக்கு விளக்கமாக அமையும் என்று நம்புகிறோம். அத்தோடு எல்லாவற்றையும் விமர்சன நோக்கிலேயே ஆராயாமல் திணைக்களத்தின் நல்ல பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவும், அப்பணிகளை மேம்படுத்த சிறந்த ஆலோசனைகளை வழங்கவும் முயற்சிப்பது வரவேற்கத்தக்கது.

ஏ.பீ எம். அஷ்ரப், வக்பு சபை பணிப்பாளர்

முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர்

10.07.2021

0 கருத்துரைகள்:

Post a Comment