Header Ads



தெமட்டகொடையில் கொரோனா டெல்டா பரவியது எப்படி..? அரச புலனாய்வுப் பிரிவு விசாரணையை ஆரம்பித்தது


இந்தியாவில் பரவிய COVID வைரஸின் டெல்டா திரிபு தெமட்டகொடையில் பதிவானமை தொடர்பாக அரச புலனாய்வுப் பிரிவும் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

தொற்றுக்குள்ளானோருடன் நெருங்கிப் பழகியவர்களை கண்டறியும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஔடதங்கள் தயாரிப்பு விநியோகம் மற்றும் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

மேலும், தொற்றுக்குள்ளான ஐவரில் மூவர் குணமடைந்துள்ளதாகவும் இருவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன கூறினார்.

இதேவேளை, புதிய வைரஸ் திரிபுகளான அல்ஃபா, பீட்டா, காமா மற்றும் டெல்டா வகைகளில் எது தொற்றினாலும் தற்போது இருக்கும் தடுப்பூசியால் உயிரிழப்பு ஏற்படாமல் கட்டுப்படுத்த முடியும் என ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவப் பிரிவை சேர்ந்த பேராசிரியர் நீலிகா மலவிலகே குறிப்பிட்டார்.

இந்த டெல்டா தொற்று இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்தோ அல்லது இங்கு பரவும் வைரஸ் திரிவுபட்டோ பரவியிருக்க வாய்ப்புள்ளதாக பேராசிரியர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.