Header Ads



பிரதமரின் பொசன் பூரணை தின வாழ்த்து செய்தி (வீடியோ)


தூய்மையான பௌத்த மதத்தை பின்பற்றி நல்லிணக்கத்துடன் வாழ எங்களுக்கு   வழிகாட்டிய மஹிந்த தேரரின்  இலங்கை வருகையை இந்த உன்னத பொசன் பூரணை தினத்தில் மிகுந்த கௌரவத்துடன் நினைவு கூர்கின்றேன்.  

தர்மாசோக மன்னனுக்கும், தேவனம்பியதீசனுக்கும் இடையிலான இராஜதந்திர நட்பின் சிறந்த விளைவாக இலங்கையில் பௌத்த சமயம் ஸ்ரீ புத்த ஆண்டு 236இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் எமது இனம், மதம் மற்றும் கலாசாரத்தின் புதிய யுகம் தோற்றம் பெற்றது.

பௌத்த கலாசாரத்தில் கலை, கல்வி, பகுத்தறிவு, விவசயாம் ஆகிய அனைத்து துறைகளும் வளர்ச்சியடைந்தன. 

மஹிந்த தேரர் அறிமுகப்படுத்திய பௌத்தத்தின் உயிர்ச்சக்தி காரணமாக, இலங்கையர்கள் உலகின் வேறு எந்த இனத்திற்கும் அடிபணியாத உயரிய இனமாக பௌத்தம் உருவெடுத்துள்ளது என்பதை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

வேறு தினங்களில் பொசன் பூரணை தினத்தில் பக்தர்களால் நிறைந்து காணப்படும் மிஹிந்தலை புனித பூமி இன்று அவ்வாறு இல்லாதிருப்பதற்கு காரணம், மனித உயிர்களை காவுகொண்டு உலகெங்கும் பரவி வரும் கொவிட் -19 தொற்றுநோயிலிருந்து நாம் அனைவரும் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவாகும்.

பௌத்த சமயத்தின் சிறந்த உள்ளர்த்தத்தை சரியாக உணர்ந்து, புத்த பொருமானின் தத்துவத்திற்கு ஏற்ப எதிர்கால வாழ்க்கையை திட்டமிடுவதற்கு, கடினமாக கடந்து செல்லும் இக்காலம் மிகவும் முக்கியமானது என்பது எனது நம்பிக்கையாகும்.

இந்த உன்னத பொசன் பூரணை தினம் தர்மத்தை அடைவதற்கு மனதை ஒளிரச் செய்யும் அர்த்தமுள்ள நாளாக அமையட்டும்! என்று நான் அனைவருக்கும் பிரார்த்திக்கின்றேன்.

 மஹிந்த ராஜபக்ஷ

 இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின்

 பிரதமர்

https://www.youtube.com/watch?v=UpBywR9_iCk

No comments

Powered by Blogger.