Header Ads



பயணத் தடை தோல்வி கண்டுள்ளது - SJB


ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரன்சித் மத்தும பண்டாரா வெளியிட்ட ஊடக அறிக்கை

பயணத் தடையை முற்றாக அமுல்படுத்துவதாக அரசாங்கம் கூறினாலும் இன்று அந்த விடயத்தில் தோல்வி கண்டுள்ளது. பயணத் தடை பிரப்பித்தாலும் வீதிகளில் வழமை போன்று வாகனங்கள் பயணித்த வன்னமுள்ளதையையே காணக்கிடைக்கிறது.பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் தலைநகருக்குள் உட்பிரவேசிக்கும் வாகனங்களின் எண்ணிக்கைகள் தொடர்பாக ஆய்வென்றை வெளியிட்டுள்ளார்.

பயணத்தடை காலத்திற்குள் மக்களின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான செயற்தி்ட்டங்களை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது.தடுப்பூசி விவகாரம் முழுமையாக சிக்கல்களால் சூழப்பட்டுள்ளது.கொவிட் கட்டுப்படுத்தல்கள் திறமை கொண்ட சுகாதார தரப்பிற்குத் தேவையான அத்தியவசிய பொருட்களை வழங்க அரசாங்கத்தால் முடியாமல் போனதால் இன்று அத்துறையினர் வேலைநிறுத்தப் பேராட்டங்களுக்கு முன் வந்துள்ளனர்.இவ்வாறான தீர்வுகளுக்கு அவர்கள் வர பிரதான காரணம் அரசாங்கத்தை விட அவர்களிடம் மனிதாபிமானம் அதிகமாகவுள்ளமையாலாகும்.

பொருளாதாரம்,இராஜதந்திரம் உள்ளிட்ட சகல துறைகளிலும் அரசாங்கம் தனது இயலாமையை வெளிப்டுத்தியுள்ளது.

நாளாந்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3000 ஐ தான்டி செல்வதிலிருந்து புலப்படுவது பயணத்தடைகளால் அரசாங்கத்திற்கு ஏற்ற பிரயசனம் கிடைக்கவில்லை என்ற பலவீனத்தையே காட்டி நிற்கிறது.

தொற்றாளர்கள், மரணிப்பவர்கள் தொடர்பான புள்ளிவிபரங்கள் கூட நம்பகரமற்றவைகளாக காணப்டுகின்றன. 

அரசாங்கம் பலவீனத்தை தேவையை விடவும் அதிகமாக காண்பித்தவன்னமுள்ளன.

மக்களின் உயிர்களைக் கூட பாதுகாக்க முடியாத அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என்பதை நாங்கள் சுட்டிக் காட்ட வேண்டும்.

ஊடகப் பிரிவு - ஐக்கிய மக்கள் சக்தி

No comments

Powered by Blogger.