Header Ads



குவைத்தில் இரத்ததானம் வழங்கி இலங்கையர்கள் சாதனை - இக்ரா இஸ்லாமிய சங்கம், செலானீஸ் உதவும் கரங்கள் பங்களித்தன


2020/2021  ஆம் ஆண்டில், இக்ர இஸ்லாமிய சங்கம் (IIC), செலானீஸ் உதவும் கரங்கள் (SHHK) ஆகிய இரு அமைப்புக்களின் கீழ் 359 நபர்கள் இரத்த தானம் வழங்கியதன் மூலம், குவைத் நாட்டில் அதிக இரத்த தானம் செய்தவர்களின் முதல் 10 வரிசைக்குள் இலங்கை  பட்டியல் படுத்தப்பட்டு சர்வதேச இரத்த தான தினமான ஜூன் 14 ஆம் திகதி, குவைத் மத்திய இரத்த வங்கியால் இலங்கை கௌரவிக்கப் பட்டது. 

சமூக நலன் கருதி இயங்கும் செலானீஸ் உதவும் கரங்களின்பன்மையான நோக்கங்களில் ஒன்று தாங்கள் வாழும் சமூகத்திற்கு ஏற்படும் மருத்துவ மற்றும் சமூகவியல் தேவைகளை, அவசரமாக தேவைப்படும் மனிதர்களுக்கு பெற்றுக் கொடுப்பதாகும். அந்த வகையில் இரத்த தானம் கருத்தில் கொள்ளப் பட்டு 2020/2021 ஆம் ஆண்டில் இவ்வமைப்பின் கீழ் 230 நபர்கள் இரத்த தானம் வழங்கி இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

அத்தோடு இரத்ததானம் வழங்கக்கூடிய குவைத் வாழ் இலங்கை அமைப்புகளான குவய்த் அவசர உதவி மைய்யம் மற்றும் இக்ரா இஸ்லாமிய சங்கம் இவர்களுக்கும் செலானீஸ் உதவும் கரங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வகையான சமூகப் பணிகளை எப்பொழுதும் ஊக்குவிக்கின்ற எமது இலங்கை தூதுவர் ULM Jowhar மற்றும் தூதரக அதிகாரிகள்  WAU POSHITHA PERERA, குவைத் வாழ் இலங்கை வைத்திய துறை சார்ந்த Dr.Nawras,Dr.Nashad,Dr.Jazeem,Dr.Siraj மற்றும் Mr.Mazoomi க்கும் இலங்கையர் சார்பில் எமது தயவான நன்றிகள். மேலும் குவைத் இரத்த வங்கி காப்பாளர் Dr.Asma அவர்களின் கண்ணியமான ஒருங்கிணைப்பு செயற்பாடுகளுக்கு நன்றி நவில்கிறோம். 

Saylaneese Helping Hands-Kuwait (SHHK)

1 comment:

Powered by Blogger.