Header Ads



மல்கம் ரஞ்சித்திற்கு எதிராக, சிவசேனை தலைவர் சச்சிதானந்தன் போர்க் கொடி தூக்கினார்


-எஸ்.நிதர்ஷன்

இலங்கையில் நடப்பது, அரசாங்கத்தின் ஆட்சியா அல்லது வத்திக்கானின் ஆட்சியா?' என, சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் கேள்வியெழுப்பினார்.

அத்துடன், போப்பாண்டவரின் ஆணையை நிறைவேற்றும் கர்தினால் மல்கம் ரஞ்சித்க்கு, இலங்கை அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு தகுதி இல்லை என்றும், அவர் கூறினார்.

யாழ். ஊடக அமையத்தில், இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு கேள்வியெழுப்பினார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், 

இலங்கையில் ஒழுங்கான அரசாங்கம் நடைபெறவில்லை என்றும் இலங்கை அரசாங்கம் தோல்வி அடைந்துள்ளது என்றும், கர்தினால் மல்கம் ரஞ்சித், தெரிவித்திருந்தார் என்றும் இது ஒரு கொடுமையான கூற்று எனவும் கூறினார்.

உயிரித்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியொதெனத் தெரிவித்த அவர், இவ்வாறு கூறுவதற்கும் கேள்வி கேட்பதற்கும், தகுதி இல்லையெனவும் கூறினார்.

இதுதான் முதன்முறையாக வழிப்பாட்டிடிடம் உடைக்கப்பட்ட சம்பவமா என வினவிய அவர், அல்ல, நானூற்று இருபது ஆண்டுகளுக்கு முன்பு திருக்கோணேச்சரம், திருக்கேதீச்சரம் கோவில்கள் உடைக்கப்பட்டன எனவும், அதற்காக தாங்கள் மனித உரிமைகள் அமைப்புக்கு போனோமா எனவும் கேள்வியெழுப்பினார்.

அத்துடன், திருக்கேதீஸ்வர வளைவு உடைக்கப்பட்டமைக்கு மன்னார் ஆயர் இதுவரை மன்னிப்பு கேட்டாரா எனவும்,  மறவன்புலவு சச்சிதானந்தன் கேள்வியெழுப்பினார்.

3 comments:

  1. என்ர செல்லம், எங்க ராஜா இருந்திங்க இவ்வலவு நாளா?

    ReplyDelete
  2. Why RSS (Sachchu) you not mentioned that the Tamil Terrorist they damaged lots of Budha temples, Mosques earlier (Not less than 30yrs)...but why you jumpped for 420 years..??? The issue now in this country is Nonsense & Idiots are in-front of microphone and they call Press-meeting..., The idiots must know what is the Press-meet first...

    ReplyDelete
  3. இல்லை இல்லை இது RSS மாட்டு மூத்திரம் குடிகார கூட்டத்தின் ஆட்சி.இந்த சூடு சுரனை இல்லாத எருமைக்கு மனிதனை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.