Header Ads



இலங்கை மக்களை எச்சரித்துள்ள WHO


இலங்கையில் தற்போது பரவிவரும் கொரோன வைரஸ் குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கை மக்களை எச்சரித்துள்ளது.

தற்போது பரவிவரும் கொரோனா வைரசினை இலங்கையர்கள் மிகவும் தீவிரமாக எடுக்கவேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கைக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் அலுவலகத்தின் பொறுப்பதிகாரி ஒலிவியா நிவ்வேரஸ் வீடியோ மூலம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

முன்னிலை பணியாளர்கள் உட்பட அரசாஙகத்தின் அனைத்து தரப்பினரும் கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

உயிர்களை காப்பாற்றுவதற்கும் கொரோனா பரவலை தடுப்பதற்கும் ஐநாவும் உலக சுகாதார ஸ்தாபனமும் தங்களால் முடிந்த எந்த உதவியையும் செய்வதற்கு தயாராகயிருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

ஆனால் சுகாதார பணியாளர்கள் படையினர் உள்ளுர் அதிகாரிகளால் இதனை தனித்து செய்ய முடியாது என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகள் முக்கியமானவை, ஆனால் சர்வதேச அளவில் தற்போது காணப்படும் பரவல் தடுப்பூசி மூலம் நாடுகள் இந்த பிரச்சினையிலிருந்து விடுபடமுடியாது என்பதை புலப்படுத்தியுள்ளன என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. TL

No comments

Powered by Blogger.