May 01, 2021

சஜித் பிரேமதாசவின் தொழிலாளர் தின செய்தி


உலக உழைக்கும் மக்களால் இரத்தம், கண்ணீர் மற்றும் மூச்சுடன் வென்றெடுக்கப்பட்ட உலக தொழிலாளர் தினம் இன்றாகும்.

இருப்பினும், இந்த முறையும், மே தினம் முழு மனித இனமும் ஒரு வைரஸால் ஏற்படும் பேரழிவின் மத்தியில் இருக்கும் நேரத்தில் கொண்டாடப்படுகிறது.  சாதாரண வாழ்க்கைக்கு அசாதாரண எதிர்ப்பைக் கொண்டு உலகம் இரண்டு ஆண்டுகளாக துன்பப்பட்டு வருகிறது.

கடந்த நூற்றாண்டில் உலகப் பொருளாதாரம் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஒரு நேரத்தைக் கண்டுபிடிப்பது கடினம் என்பது போல் இந்தத் தாக்கம் பாதித்துள்ளது.இதன் விளைவாக, தொழிலாளர் வர்க்கமே பெருகிய முறையில் பாதிக்கப்படக்கூடியதாகி விட்டது.பில்லியன் கணக்கான மக்கள் வேலை இழந்த நிலையில்,அவர்களின் அன்றாட வாழ்க்கை முற்றிலும் சீர்குலைந்துள்ளது. இது எமது நாட்டைப் பெறுத்த மட்டிலும் வேறுபட்டதல்ல. இந்த பேரழிவின் மத்தியில், எங்கள் தாய் நாட்டின் நிலைத்தலுக்காக அயராது உழைக்கும், அனைத்து உழைக்கும் மக்களுக்கும் நாங்கள் மரியாதை செலுத்துகிறோம்.

இந்த பேரழிவு தருணத்தில், ஒருவருக்கொருவர் கைவிடாமல் பரஸ்பர நட்பை வளர்த்துக் கொள்வதன் மூலம் மனிதனுக்கு மனிதன் உதவ வேண்டிய முக்கியமான சூழ் நிலை உருவாகியுள்ளது.இரசாயன ஆயுதமே அல்லது பயங்கரவாத தாக்குதலோ அன்றி ஒரு வகை நுன்னிய வைரஸ் முழு உலகையும் தனது ஆழுகைக்குட்படுத்தியுள்ளது.

வைரஸ் தோற்கடிக்கப்பட்டாலும், வைரஸ் விட்டுச் செல்லும் சோகமான நிலைமைகள் நீண்ட காலத்திற்கு சரி செய்ய முடியாதவைகளாகும்.

நம் நாட்டில் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் ஏற்கனவே கடுமையான வேலைவாய்ப்பு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். ஆசிரியர்கள், சுகாதாரத் துறையினர், விவசாயிகள், மீன் பிடித்துறையினர், தோட்டத்துறையினர், போக்குவரத்துத் துறையினர் உள்ளிட்ட ஒட்டுமொத்த தொழிலாளர் வர்க்க சமூகமும் கடுமையான கஷ்டங்களை எதிர்கொள்கிறது.உயிரை துச்சமாக மதித்து அத்தியவசிய சேவைகளையாற்றும் பிரிவினர்கள் குறித்தும் கூட ஆட்சியாளர்களின் கவனம் இழந்துள்ளது.தூரநோக்கற்ற பொருளாதார மேலாண்மை காரணமாக உள்ளூர் வளங்களை கொள்ளையடிக்க வழிவகுத்ததுள்ளது.இதற்கிடையில், எதிர் தரப்பினர்களுக்கு  எதிராக அரசு அடக்குமுறையைப் பிரயோகிக்கிறது.நாட்டைக் கட்டியெழுப்புவதைத் தவிர்த்து, இலட்சிய நிகழ்ச்சி நிரலைத் தள்ளி நாட்டையும் மக்களையும் இருளில் தள்ளும் ஒரு மோசமான நடவடிக்கையை அரசாங்கமே மேற்கொண்டு வருகிறது. நாட்டைக் கட்டியொழுப்பும் நிகழ்ச்சி நிரல்களுக்குப் பதிலாக தனிப்பட்ட அதிகார நிகழ்ச்சி நிரல்களை அரசாங்கம் பின்பற்றுவதால் தொழில்முனைவோர், இளைஞர்கள் மற்றும் வர்த்தகர்கள் உட்பட அனைத்து சக்திகளும் விரக்தியடைந்துள்ளனர்.

இவற்றிற்கு எதிராக ஒட்டுமொத்த தேசத்தையும் அணி திரட்டுவதற்கான பணி எங்களிடம் உள்ளது. கொரோனா பேரழிவு என்ற போர்வையில் தாய் நாட்டின் இறையாண்மை,மதிப்பு மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் காட்டிக் கொடுப்பதற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நிபந்தனையின்றி முன்வருவதாக நாங்கள் சத்தியம் செய்கிறோம். உழைக்கும் அனைத்து மக்களுக்கும் சௌபாக்கியமிக்க எதிர்காலம் உருவாகட்டும்

சஜித் பிரேமதாச

எதிர்க் கட்சித் தலைவர் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்

0 கருத்துரைகள்:

Post a Comment