Header Ads



ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசிகள் இலங்கைக்கு வந்தன - 7 மில்லியன் தடுப்பூசிகள் 69.65 மில்லியன் அமெரிக்க டொலர்


ரஷ்யாவின் ஸ்புட்னிக் V (Sputnik V) கொவிட் தடுப்பூசியின் முதல் தொகுதி ​நேற்று (03)இரவு இலங்கையை வந்தடைந்துள்ளது. 

அதனடிப்படையில் முதல் தொகுதியில் 15,000 தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். 

குறித்த தடுப்பூசிகளை பொறுப்பேற்க இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்த நிலையில், பொறுப்பேற்கப்பட்ட தடுப்பூசிகளை பின்னர் சுகாதார அமைச்சிடம் அவர் ஒப்படைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

ரஷ்யாவின் ஸ்புட்னிக் V (Sputnik V) கொவிட் தடுப்பூசியை இந்நாட்டு அவசர தேவைக்காக பயன்படுத்த கடந்த தினம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது. 

அதற்கமைவாக 7 மில்லியன் தடுப்பூசிகளை 69.65 மில்லியன் அமெரிக்க டொலருக்கு கொள்வனவு செய்ய அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.