Header Ads



தேர்தல் முறைமை பாராளுமன்ற தெரிவுக்குழுவில் 2 முஸ்லிம்கள் - ஹக்கீம், றிசாத் கட்சிகளுக்கு இடமில்லை


தேர்தல் முறைமை தொடர்பில் ஆராய்வதற்காக, அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில், 15 பேர் கொண்ட பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. சபாநாயகரால் நேற்று சபையில் அறிவிக்கப்பட்ட இந்தக் குழுவில், சிறுபான்மை கட்சிகளைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்கள் உள்ளடங்கியுள்ளனர்.

அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, அலி சப்ரி, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கபிர் ஹஷிம் ஆகியோர் சிறுபான்மையின பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.அத்தோடு அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ஜீ.எல்.பீரிஸ், பவித்ரா வன்னியாரச்சி, விமல் வீரவன்ச, பாராளுமன்ற உறுப்பினர்களான அநுரகுமார திஸாநாயக்க, ரஞ்சித் மத்தும பண்டார, மதுர விதானகே, சாகர காரியவசம் ஆகியோரும் இந்தக் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

3 comments:

  1. இவர்கள் போதும்.

    ReplyDelete
  2. இந்த இரு கட்சி MPகளும் பணத்துக்காக கட்சி கூட்டணி மாறி வாக்களித்தவர்கள், தலைமையும் இவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கவில்லை.
    எனவே தான் இந்த இரு கட்சிகளும் இதில் சேர்க்கபடவில்லை.

    ReplyDelete
  3. பிரதமர் அவரகளால் தெரிவு செய்யப்பட்ட "தேர்தல் முறைமை பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட தெரிவுக்குழுவில் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்களை தவிர்த்துக் கொண்டமைக்காக இலங்கை முஸ்லிம் சமூகம் எமது மதிப்புக்குரிய பிரதமர் மஹிந்த இராஜபக்ஷ ஐயா அவரகளுக்கு பெரிதும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.