Header Ads



மேலும் 8 மரணங்கள் - வயதுகள்: 62, 45, 53, 56, 76, 48, 73, 57 - இதுவரை 655 மரணங்கள்


இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 8 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன இன்று (27) உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 647 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 8 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 655 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

இவ்வாறு மரணமடைந்தவர்களில் இருவர் இன்றும் (27), இருவர் நேற்றும் (26), இருவர் நேற்று முன்தினமும் (25), ஏப்ரல் 22, 23ஆம் திகதிகளில் தலா ஒவ்வொருவரும் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.