Header Ads



கொரோனா ஒழிப்பில் ஈடுபாட்டுடன் பங்கேற்ற PHI டெங்கினால் மரணம்

கொரோனா வைரஸ் ஒழிப்பு கடமைகளில் மிகுந்த ஈடுபாட்டுடனும் பொறுப்புடனும் கடமையாற்றி வந்த பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவர், டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.

பேருவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட பயாகல-பொத்துவில பொதுச் சுகாதார பரிசோதகராகக் கடமையாற்றி வந்த ருச்சித பண்டார என்ற அதிகாரி, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் (28) பகல் உயிரிழந்துள்ளார்.

2016ஆம் ஆண்டில் களுத்துறை தேசிய சுகாதார பீடத்தில் 5 வருடங்கள் பயிற்சியை நிறைவு செய்ததன் பின்னர், பேருவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடமையாற்றி வந்தார்.  

கடந்த வருடம் திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட இவர், களனி பிரதேசத்துக்கு வசிக்கச் சென்றிருந்தார். அங்கிருந்தே கடமைகளுக்காக தினமும் பேருவளை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்கு வந்து சென்றுள்ளார். இந்நிலையிலேயே டெங்கு காய்ச்சலுக்கு உள்ளான நிலையில் மரணித்துள்ளார். 

No comments

Powered by Blogger.