Header Ads



முகக்கவசம் அணிய மறுத்தவருக்கு 5 ஆண்டுகள் மிக்ரோஸ் கடைகளுக்கு செல்ல தடை


- ச.சந்திரபிரகாஷ் -

சுவிஸ் சூப்பர்மார்க்கெட் ஒன்றிக்குள் முககவசம் அணிய மறுத்த நபர் ஒருவருக்கு குறித்த சூப்பர்மார்க்கெட் (மிக்ரோஸ்) மற்றும் நாடு தழுவிய ரீதியில் உள்ள அதன் கிளை நிறுவனங்களுக்குள் செல்வதற்கு ஐந்து ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

‘கொரோனா வைரஸ் கிளர்ச்சியாளர்கள்’ என்று அழைக்கும் குழுவின் ஒரு பகுதியாக சமூக ஊடகங்களில் தீவிரமாக செயல்படும் அந்த நபர் முகக்காவசம் அணியாமல் லூசெர்னிலுள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குள் உள்நுழைய முயன்றுள்ளார்.

அங்குள்ள ஊழியர்கள் அவரை தொடர்ந்து முககவசம் அணியுமாறு வலியுறுத்திய போதும் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இதையடுத்து பொலிஸார் வரவழைக்கப்பட்டு குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

இதன் விளைவாக சுவிட்சர்லாந்தில் உள்ள அனைத்து மிக்ரோஸ் இதனுடைய கிளைகளான ரெஃபுசெனிக் , ஸ்போர்ட்-எக்ஸ்.எக்ஸ், மைக்காசா ஆகிய வர்த்தக நிலையங்களுக்கு இவர் செல்வதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

ஒரு வாடிக்கையாளர் துஷ்பிரயோகம் செய்தல் , அச்சுறுத்தல் மற்றும் நடவடிக்கைகளை சீர்குலைத்தால் போன்ற காரணங்களுக்காக அவரை குறித்த இடத்திற்கு செல்ல தடை விதிக்கும் உரிமையை ஒரு நிறுவனம் கொண்டுதுள்ளது என்று மிக்ரோஸ் (லூசெர்ன்) ஒரு செய்தித் தொடர்பாளர் ஒருவர் சுவிஸ் செய்தி நிறுவனமான (20 நிமிடங்களுக்கு) தெரிவித்துள்ளார்.

முகக்கவசம் அணிவதால் ஏற்படும் பக்கவிளைவுகளை உடையவர்கள் மற்றும் மருத்துவ சான்றிதழ்கள் உள்ளவர்கள் மட்டுமே முககவசம் இல்லாமல் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடமுடியும்.

சுவிட்சர்லாந்தில் உள்ள அனைத்து சூப்பர் மார்க்கெட்டுகளிலும் ,பொது போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


No comments

Powered by Blogger.