Header Ads



இதுவரை 38 ஜனாஸாக்கள் நல்லடக்கம் - 5 வது நாளாக தொடருகிறது, இன்று 7 ஜனாஸாக்கள் அடக்கம்


- எஸ்.எம்.எம்.முர்ஷித் -

கொரோனாவினால் மரணமடைந்தவர்களின் ஜனாஸாக்கள் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் நல்லடக்கம் செய்யும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை கிழமை ஐந்தாவது நாளாகவும் இடம் பெற்றது இன்று பிற்பகல் 04 மணிவரை ஏழு ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.

இதில் ஐந்து ஆண்களும் இரண்டு பெண்களது ஜனாஸாக்களுமாக ஏழு ஜனாஸாக்கள் இன்று செவ்வாய்க்கிழமை அடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் இவர்கள் சாய்ந்தமருது, தர்ஹாடவுன், திருகோணமலை, வெள்ளவத்தை, மாவனல்லை பிரதேசத்தை செர்ந்த ஒரு ஜனாஸாவும் அக்குறனை பிரதேசத்தை பிரதேசத்தை சேர்ந்த இரண்டு ஜனாஸாக்களும் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கொரோனா தொற்றால் மரணிக்கும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதற்கமைய ஐந்து நாட்களில்; முப்பத்தெட்டு (38) ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் மேலும் தெரிவித்தார்.

1 comment:

  1. Ottamawadi makkalukkum,antha kaanniyai koduthu uthaviarukkum engalathu manamarntha nanrihal.

    ReplyDelete

Powered by Blogger.