Header Ads



கொரோனா தடுப்பூசி போட்ட 2 பேர் மரணம் - ஆனால் தடுப்பூசியால் மரணிக்கவில்லை என்கிறார் Dr ஹேமந்த


கோவிட் தடுப்பூசி போட்ட பின்னர் கம்பஹா பிரதேசத்தை சேர்ந்த இரண்டு நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அந்த மரணங்கள் கோவிட் தடுப்பூசியால் நிகழ்ந்ததென கருத்திற்கொள்ள முடியாதென பிரதி சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

அவை தடுப்பூசி பெற்ற பின்னர் நிகழ்ந்த மரணம் மாத்திரமே. தடுப்பூசி பெற்றதால் நிகழ்ந்த மரணம் அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எப்படியிருப்பினும் இது தொடர்பில் பரிசோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கோவிட் தடுப்பூசி போடப்பட்ட பின்னர் தொடர்ந்து இரண்டு நாட்கள் காய்ச்சல் இருந்தால் வைத்தியரை நாட வேண்டியது அவசியமாகும். தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்கள் ஓய்வாக இருப்பது மிகவும் அவசியம் என பிரதி சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.