Header Ads



நாட்டில் கிடைக்கும் Graphite கற்களை பயன்படுத்தி, நவீன லித்தியம் அயன் பேட்டரிகளை தயாரிக்க நடவடிக்கை


 நாட்டில் கிடைக்கும் Graphite கற்களை பயன்படுத்தி நவீன லித்தியம் அயன் பேட்டரிகளை ( Lithium Ion Battery) தயாரிக்கும் நிறுவனத்தை நிர்மாணிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமையொழிப்பு ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

திறன் மேம்பாடு, தொழிற்கல்வி, ஆராய்ச்சி இராஜாங்க அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் பயனாக நவீன பேட்டரி தயாரிப்புகளுக்கு உள்ளூர் Graphite கற்களை பயன்படுத்துவதற்கான திறனை தேசிய அடிப்படை ஆய்வுகள் நிறுவனம் கண்டறிந்துள்ளது.

ஏனைய நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் லித்தியம் அயன் பேட்டரிகளை விட அதிக திறன் கொண்ட பேட்டரிகளை உற்பத்தி செய்வதன் மூலம் உலக சந்தையை ஈர்க்கும் சாத்தியம் உள்ளதாக நம்பப்படுகிறது.

இந்த நோக்கத்திற்காக அமைக்கப்படும் அரசுக்கு சொந்தமான நிறுவனத்திற்கு மூலதனமாக அரசு நிறுவனங்களும் அரசாங்க நிதியுதவியும் பயன்படுத்தப்படவுள்ளது.

1 comment:

  1. What a joke is this. U incapable, currepted people cannot produce even tooth pricks locally and import it from china . How can u through such a big and obvious lie just for passing time? . Shame on you.

    ReplyDelete

Powered by Blogger.