February 20, 2021

ராஜித்த மீது, நசீருக்கு வந்தது கோபம் (முழு விபரம்)


(ஊடகப் பிரிவு)

மதம் மற்றும் சமூகத்தை அடகு வைத்துவிட்டுத்தான் அரசியலமைப்பு இருபதாவது திருத்தத்திற்கு முஸ்லிம் எம்பிக்கள் ஆதரவளித்ததாக, ராஜிதசேனாரத்ன எம்,பி தெரிவித்த கருத்து, பணத்துக்கு சோரம்போகும் அவரது குணத்தையே காட்டுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி. நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இராஜிதசேனாரத்ன எம்பி தெரிவித்த கருத்துக்களை நிராகரித்த அவர், தெரிவித்துள்ளதாவது;  

ராஜிதசேனாரத்ன கடந்த காலங்களில் ஒரு சில முஸ்லிம் அரசியல் வாதிகளுடன் இவ்வாறான டீல்களை  நடாத்திய பழக்கதோஷத்திலேயே தற்போதும் இந்த கருத்தை  முன்வைத்தள்ளார். இலகுவில் சோரம்போகும் மற்றும் பணத்துக்கு அடிமையாகும் எளிய அரசியல்வாதிக்கு ராஜித சேனாரத்ன சிறந்த உதாரணம். இவரது இந்த எளிய சிந்தனைகளில் தான், இருபதாவது திருத்தத்திற்கு ஆதரவளித்த முஸ்லிம் எம்பிக்களையும் பார்க்கின்றார். முஸ்லிம் சமூகத்தின் சமகால அரசியல் அபிலாஷைகளைச் சவாலுக்கு உட்படுத்தும் விடயங்கள் பற்றி ராஜிதவுக்குத் தெரியுமா? இழந்து போன நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புக்களை வெல்ல வேண்டிய வியூகங்களையே நாம் செய்து வருகிறோம். 

வியாபாரம் என்பது எமது பரம்பரைச் சொத்து. இதை அரசியலுக்குள் புகுத்தும் எந்தத் தேவையும் எமக்கில்லை. இவர், சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில், அரச சேவைகளும் வியாபார நோக்கில் இருந்ததை இந்த நாடே அறியும். வெள்ளை வேன் கடத்தல் நாடகத்தை அரங்கேற்றி, அசிங்க அரசியல் செய்த இவரை, எமது மக்கள் பொருட்படுத்தப் போவதும் இல்லை. இல்லாததைப் பேசியும் கற்பனைக் காரணங்கள் கூறியும் எமது சமூக அடைவு மற்றும் இலட்சியத்திலிருந்து எங்களைப் பிரிக்க முடியாது. வருமானத்தை எதிர்பார்த்து ராஜபக்க்ஷக்களை விமர்சிக்கும் ராஜிதவுக்கு சமயங்களின் அறிவு பற்றி எங்கே தெரியப்போகிறது. கலாசாரம் மற்றும் நாகரீகத்தை மதிக்கின்ற மக்கள் வாழும் நாட்டில், மதமும் சமூகமும் விற்கப்படுவதாகவும் இவர், விமர்சித்துள்ளமை கவலையளிக்கிறது. 

முஸ்லிம்கள் உயிராக மதிக்கும் மதத்தை பண்டப் பொருளாக இவர் கருதுகிறார் போலுள்ளது.மறுமை வாழ்வு பற்றிய நம்பிக்கை கொச்சைப்படுத்தப்படுவதை இல்லாதொழிப்பதே, முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எம்போன்ற எம்பிக்களின் தேவை. இதற்கான வியூகங்களில்தான் இருபதாவது திருத்தம்பற்றிச் சிந்தித்ததாகவும் ஹாபிஸ் நஸீர் எம்பி தெரிவித்துள்ளார்.

10 கருத்துரைகள்:

ராஜித சொன்னதில் எந்தத் தவறுமில்லை, உங்கள்களுக்கு மதமாவது சமூகமாவது!

நசீறு உனக்கு உண்மையை சொன்னால் உடம்பொல்லாம் புண்ணே

Rajitha tells the truth that these MUNAFIQS couldn't understand.

The truth Rajitha tells, these MUNAFIQS couldn't understand

Dear Muslim Community in Sri Lanka,

When "The Muslim Voice" told about "the Satan of Democracy" Rajitha Seneratne since 2014 after the Aluthgama-Beruwela violence, those Muslims who bluntly sided the "Yahapalana" group created a "hue and cry" against "The Muslim Voice" telling the "TRUTH". Now they themselves have begun to accept that "The Muslim Voice" was correct, Insha Allah. What we need is a change in the political field of Muslim Politics in Sri Lanka. It is time up that a NEW POLITICAL FORCE, that will be honest and sincere, that will produce "CLEAN" and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah. The Muslims Youth are most capable of doing it and the YOUTH can lead this cause, Insha Allah. Being someone who has very closey involved in the political arena, I am sure that they can take this challenge forward together with brother Ali Sabry, Insha Allah.
Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, Former SLFP/SLPP District Organizer - Trincomalee District, Convener - The Muslim Voice, Member "Viyatmaga".
TAMIL TRANSLATION:
இலங்கையில் அன்புள்ள முஸ்லிம் சமூகம்,

அலுத்கம-பெருவெலா வன்முறைக்குப் பின்னர் 2014 முதல் "முஸ்லீம் குரல்" "ஜனநாயகத்தின் சாத்தான்" ராஜிதா செனரத்னனைப் பற்றி கூறியபோது, ​​"யஹாபலானா" குழுவை அப்பட்டமாக பக்கவாட்டாகக் கொண்ட முஸ்லிம்கள் "முஸ்லீம் குரலுக்கு" எதிராக "சாயல் மற்றும் அழுகை" ஒன்றை உருவாக்கினர் "உண்மை". இப்போது அவர்களே "முஸ்லீம் குரல்" சரியானது என்பதை ஏற்றுக்கொள்ளத் தொடங்கியுள்ளனர், இன்ஷா அல்லாஹ். நமக்குத் தேவையானது இலங்கையில் முஸ்லீம் அரசியலின் அரசியல் துறையில் ஏற்பட்ட மாற்றம். முஸ்லீம் சமூகத்தை அரசியல் ரீதியாகவும், இல்லையெனில், குறிப்பாக இளைஞர்களிடமிருந்தும், எழுந்து நின்று பாதுகாக்க "சுத்தமான" மற்றும் விடாமுயற்சியுள்ள முஸ்லீம் அரசியல்வாதிகளை உருவாக்கும் ஒரு புதிய அரசியல் சக்தி, நேர்மையாகவும் நேர்மையாகவும் இருக்கும். இலங்கை முஸ்லீம் சமூகம் வரவிருக்கும் எதிர்காலத்தில் எந்தவொரு புதிய தேர்தலையும் எதிர்கொள்ளும், இன்ஷா அல்லாஹ். முஸ்லீம் இளைஞர்கள் அதைச் செய்ய மிகவும் திறமையானவர்கள் மற்றும் இளைஞர்கள் இந்த காரணத்தை வழிநடத்த முடியும், இன்ஷா அல்லாஹ். அரசியல் அரங்கில் மிகவும் நெருக்கமான ஒருவர் என்பதால், அவர்கள் இந்த சவாலை சகோதரர் அலி சப்ரி, இன்ஷா அல்லாஹ் ஆகியோருடன் சேர்ந்து முன்னெடுக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.
Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, Former SLFP/SLPP District Organizer - Trincomalee District, Convener - The Muslim Voice, Member "Viyatmaga".

Nazeer- You look like a fool. Really everybody knows that you all sold the dignity of our community. You have no right to talk about Mr Rajitha. What he said is absolute truth. The prostitutes are better than you people. Basically you can not support an amendment proposed by the government. The 20th amendment is nasty law from minority point of view, specially from muslims point of view. we know for you all it is the money that mattered.

Rajitha's statement is true. Voting for 20th amendment cannot be forgiven. U cannot face the society.

Naseer Ahmed MP, what you said about Rajitha Senaratne, fits you perfectly. In fact, in him, you are seeing yourself. Don't think you can fool the people All the time.

ஐயா சொக்கத்தங்கம் இவரு. வாக்களித்த மக்களை ஏமாத்திய ஏமாத்துக்காரன்..

Post a Comment