Header Ads



இளவரசர் ஹுசைன் உள்ளிட்ட முன்னாள் ஆணையாளர்களுடன் 20 நிபுணர்கள் இலங்கை பற்றி விடுத்துள்ள அறிக்கை


சர்வதேச நியாயாதிக்கத்தை பயன்படுத்தி நீதிக்கு முயலவேண்டும்- சர்வதேசநீதிமன்றம் போன்றவழிமுறைகளை ஆராயவேண்டும்- தடைகளை விதிக்கவேண்டும்- ஐநாவின் முன்னாள் மனித உரிமை ஆணையாளர்கள் விசேட நிபுணர்கள் உட்பட 20 பேர் கூட்டாக வேண்டுகோள்

இலங்கையில் வன்முறைகளை முடிவிற்கு கொண்டுவருவதற்காக சர்வதேச சமூகம் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றிற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டு;ம் முன்னாள் ஐக்கியநாடுகள் நிபுணர்களும் சுயாதீன நிபுணர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முன்னாள் ஐக்கியநாடுகள் மனிதஉரிமை ஆணையாளர்கள், கொலம்பியாவின் முன்னாள் ஜனாதிபதி யுவன் மனுவல் சன்டோஸ் ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் பிரதி செயலாளர் ஜன் எலியசன் உட்பட 20 முன்னாள் நிபுணர்களும் சுயாதீன நிபுணர்களும் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கை நீதி மற்றும் பொறுப்புக்கூறலில் நாடு முன்னேற்றத்தை காணவில்லை என்பதை அடிக்கோடிட்டுக்காட்டியுள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உருவாகிவரும் போக்குகள் குறித்த ஆய்வுகளை அடிப்படையாக கொண்ட இந்த அறிக்கை நிலையான நல்லிணக்கம் மற்றும் மீண்டும் மனித உரிமை மீறல்கள் மோதல்கள் இடம்பெறுதலை தடுப்பதற்கான முக்கியமான விடயமாக, இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் அநீதிகளிற்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கானஉறுதியான சர்வதேச நடவடிக்கைகளை பரிந்துரைத்துள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உறுப்புநாடுகளை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளுடன் இணைந்து செயற்பட்டு சர்வதேச நியாயாதிக்கத்தின் மூலம் நீதிக்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு மனித உரிமை ஆணையாளர் விடுத்த வேண்டுகோளை நாங்கள் எதிரொலிக்கின்றோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிப்பதை நிறுத்த மறுப்பதால் சர்வதேச நீதிமன்றம் போன்ற காணப்படுகின்ற சர்வதேச வழிமுறைகள் மூலம் பொறுப்புக்கூறலிற்கான வழிவகைள் குறித்து ஆராயவேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச குற்றங்களில் ஈடுபட்டனர் என்ற நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் எதிராக இலக்குவைக்கப்பட்ட தடைகளை விதிக்கவேண்டும் என்ற மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரையையும் நாங்கள் ஆதரிக்கின்றோம் எனவும் ஐநாவின் முன்னாள் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.