Header Ads



அடக்கம் செய்யப்பட்ட பெண்ணுக்கும், குடும்பத்திற்கும் கொரோனா தொற்றில்லை - PCR மூலம் உறுதிப்படுத்தினார் பிரதேச சுகாதாரப் பரிசோதகர்


( ஐ. ஏ. காதிர் கான் )

   மினுவாங்கொடை, கல்லொழுவை பிரதேசத்தில், அண்மையில் மரணித்து அடக்கம் செய்யப்பட்ட பெண்ணுக்கோ மற்றும்  அப்பெண்ணின் குடும்ப உறுப்பினர்களுக்கோ கொரோனா தொற்று இல்லை என, பிரதேசத்திற்குப் பொறுப்பான பொது சுகாதாரப் பரிசோதகர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.

  பிரதேசத்திற்குப் பொறுப்பான கிராம சேவை அதிகாரியை *அறிவுறுத்தாமல், இப்பிரதேசத்தில் மரணித்த பெண்ணொருவரின் உடலை அடக்கம் செய்திருப்பது தொடர்பில், மினுவாங்கொடை பொலிஸில்  *கிராம சேவை அதிகாரியினால் கடந்த 08 ஆம் திகதி இரவு முறைப்பாடு  செய்யப்பட்டிருந்ததையடுத்து* இது தொடர்பிலான அறிக்கையொன்றினை குடும்பத்தார் மூலமாகப் பெற்றுத்தருமாறு,மினுவாங்கொடை பொலிஸாரினால் பிரதேசத்திற்குப் பொறுப்பான பொது சுகாதாரப் பரிசோதகர் வரவழைக்கப்பட்டு அறிவுறுத்தப்பட்டிருந்தார்.

   இதனையடுத்து, பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர் தலைமையிலான குழுவினர், மரணித்து அடக்கம் செய்யப்பட்ட குறித்த பெண்ணின் குடும்ப உறவினர்களிடம் பீ.சீ.ஆர். பரிசோதனை மேற்கொண்டபோது, "எவருக்கும் கொரோனா தொற்றில்லை" என உறுதிப்படுத்தினார். இதனை மையமாக வைத்து, "மரணித்த பெண்ணுக்கும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பில்லை. இதனால், இவரை அடக்கம் செய்ததில் தவறில்லை"  எனவும்  உறுதிப்படுத்தினார்.

    இதேவேளை, *"மரணித்த பெண் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுமில்லை. அத்துடன்,  கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடனான   தொடர்புகளை வைத்திருந்தவராக இருக்கவுமில்லை. இப்பெண், நீண்டகாலமாக சுகயீனமாக இருந்துள்ளார். இதன்காரணமாகவே இவர் மரணித்துள்ளார்"  என்ற விபரங்கள் அடங்கிய விரிவான  தகவல்களும் குடும்பத்தாரிடமிருந்து தெளிவாகப் பெறப்பட்டு, இதன்  அறிக்கையும்  பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, இது தொடர்பிலான விசாரணைகள்  நிறைவுபெற்றதாகவும், பிரதேச சுகாதாரப் பரிசோதகர் மேலும் சுட்டிக்காட்டினார்.

No comments

Powered by Blogger.