January 24, 2021

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒரு நிறுவனத்தை அமைப்பதன் மூலம், வதிவிடத்தைப் பெறுவதற்கான நடைமுறை


பல்வேறு காரணங்களுக்காக ஐக்கிய அரபு இராட்சியம் (United  Arab Emirates ) முதலீட்டாளர்களை ஈர்க்கக்கூடியதொறு நாடாக திகழ்கிறது . வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அரபு இராட்சியம் உலகில் உள்ள பெருமளவிலான  முதலீட்டாளர்களை ஈர்க்கக்கூடிய நாடுகளில் முதலாவதாக அங்கம் வகிக்கிறது     , ஏனெனில் இது பிராந்தியத்தில் தாராளமய வர்த்தக ஆட்சியை  கொண்டுள்ளது. இறக்குமதி ஏற்றுமதி , ஆடை , தளபாடங்கள், வங்கி, சுற்றுலா, ரியல் எஸ்டேட் மற்றும் உற்பத்தி போன்றவை உட்பட பல்வேறு தொழில்களில் கவனம் செலுத்திய பன்முகப்படுத்தப்பட்ட பொருளாதாரதை கொண்ட நாடக விளங்குகிறது  , நன்கு நிறுவப்பட்ட உட் கட்டமைப்பு, நம்பகமான வங்கி முறை மற்றும் நிலையான அரசியல் சூழல் ஆகியவை வணிகச்செயற்ப்பாட்டை மற்ற நாடுகளை விட ஒரு சிறந்த இடத்தில் வைத்திருக்கிறது. 

150 க்கும் மேற்பட்ட தேசிய இனங்களுடன், வெளிநாட்டவர்கள் தங்கள் சொந்த கலாச்சாரத்தை கடைபிடிக்கின்றனர், மேலும் குற்ற எண்ணிக்கையில்  மிகக் குறைந்த அளவை   கொண்ட பாதுகாப்பான சூழலை இந்நாடு  வழங்குகிறது. ஐக்கிய அரபு இராச்சியத்தின்  கலாச்சாரம் இஸ்லாமிய மரபுகளிலிருந்து வந்தது. மரியாதை மற்றும் விருந்தோம்பலின் நல்லொழுக்கங்கள் பாராட்டப்படுகின்றன, மேலும் அவை உள்ளூர் மக்களின் அரவணைப்பையும் நட்பையும் பிரதிபலிக்கின்றன. சமூகத்தில்  மாறுபட்ட வாழ்க்கை முறைகளுக்குள்ளும்   சகிப்புத்தன்மையை முன்மாதிரியாக கொண்டிருக்கிறது.

ஆடைத் தெரிவில் சுதந்திரம் இருப்பதால் வெளிநாட்டவர்களுக்கு தங்கள் மதத்தை வெளிப்படுத்தவும் பின்பற்றவும் சுதந்திரம் உள்ளது. பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர், மேலும் அவர்கள் பாதுகாப்பான சமூகத்தில் இருப்பதற்கான சுதந்திரத்தை அனுபவித்து, பாதுகாப்பான வாழக்கையை வழிநடாத்துகின்றனர் . அனைத்து விரைவான வளர்ச்சியுடனும், ஐக்கிய அரபு இராச்சியம் அதன் பாரம்பரியத்துடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது.

சிற்றுண்டிச்சாலை, மளிகைக் கடைகள், சில்லறை விற்பனை நிலையங்கள், உடற்பயிற்சிக் கூடம் மற்றும் பல வர்த்தக மற்றும் சேவை வணிகங்கள் போன்றவை  அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களை  எப்போதும் கொண்டு காணப்படும் . Bur Dubai  பகுதிகள்  வார இறுதி முழுவதும் பரபரப்பாக இயங்கிக்கொடு இருக்கும் , Meena Bazaar , Deira போன்ற இடங்கள் இலங்கையில் இருக்கும் மெயின் ஸ்ட்ரீட் Pettah வை நினைவு படுத்தும் படியாக  கடைக் கடைக்காரர்களின் புகலிடமாக இருக்கிறது . இந்தியா, பாகிஸ்தான் மற்றும் துணைக் கண்டத்தில் இருந்து முதலீட்டாளர்களுடனான வணிகங்கள் துபாயின்  புவியியலில் கணிசமான அளவுக்கு  ஷாப்பிங், பொழுதுபோக்கு மற்றும் உணவுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. சிறிய மற்றும் இலாபகரமான வியாபாரத்தில் ஈடுபடுவது இலாபகரமான வருவாயைத் தேடுவோருக்கு சிறந்த தெரிவாக விளங்குகிறது . இந்த உணவகங்கள்  தங்கள் பதிவு பெயரைக்கொண்டு அழைக்கப்படுவதை விடபுவியியல் குறிப்பால் பிரபலமாக உள்ளன; உதாரணமாக கொழும்பு கடை , பஞ்சாபி கடை , பெங்காலி, மலபார், பதானி, பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான், லெபனான் கடை என அழைக்கப்படுவதோடு அவர்களின் மைய கருப்பொருள்களைக் கொண்ட உணவகங்கள் பன்முகப்படுத்தப்பட்ட சந்தையில் ஒரு அற்புதமான பங்கைக் கொண்டுள்ளன. காலையில் சமோசா (Samosa ) மற்றும் Tea  சாப்பிடும்போது, ஒரு முதலீட்டாளர்   டி விற்பதன் மூலமும் ஒரு முதலீட்டாளர் துபாயில் பணக்காரராக முடியும் என்று கூறும் அளவுக்கு அதன் வியாபாரம் அமைந்திருக்கும், .

துபாயில் உள்ள அனைத்து வணிக நடவடிக்கைகளுக்கான அடிப்படை தேவை அவற்றுக்கான வணிக உரிமத்தை பெற்றுக்கொள்ளுதல் ஆகும்  ;

தொழில்துறை அல்லது உற்பத்தி நடவடிக்கைகளுக்கான தொழில்துறை உரிமங்கள் துபாய் பொருளாதாரத் துறையால் (டி.இ.டி) வழங்கப்படுகின்றன மற்றும் அவற்றில் சில  வெளிப்புற ஒப்புதல்களுக்கு (External  Approval  )உட்பட்டவை, . ஒரு உணவகம் (restaurant ) அல்லது கபே (Cafe )போயன்றவற்றை பதிவு செய்ய , துபாய் நகராட்சி போன்ற  அதிகாரிகளால்  அதன் வரைபு (Layout )   ஆய்வு செய்யப்பட்டு அனுமதி வழங்கப்படும் . அதேபோல், ஒரு உடற்பயிற்சி கூடத்திற்கு உரிமம் வழங்கப்படுவதற்கு முன்பு இ ளைஞர் மற்றும் விளையாட்டு நல ஆணையத்தின் ஒப்புதல் தேவைப்படும் . இந்த வணிகங்கள்  வியாபார  நிறுவனச்  சட்டத்தால் நிர்வகிக்கப்படுகின்றன.

துபாயில் கம்பெனி ஒன்றை பதிவு  செய்ய மூலதன வங்கி  வைப்புச் சான்றிதழ் (Paid-up Share Capital ) தேவையில்லை. 

துபாயில் வியாபாரம் ஒன்றை அமைக்க 3 தெரிவுகள் காணப்படுகின்றன  

01 பிரதான நிலப்பரப்பில் அமைக்கப்படும் கம்பனிகள் 

02 வரையறுக்கப்பல்ல நிலப்பரப்பில் அமைக்கப்படும் கம்பெனிகள் 

03. கடல் கடந்த நிலப்பரப்பில் அமைக்கப்படும் கம்பெனிகள் 

01 பிரதான நிலப்பரப்பில் அமைக்கப்படும் கம்பனிகள்;

பொதுவாக பொருட்களை வர்த்தகம் செய்ப்பவர்கள் , தமது  பொருட்களை துபாய் சந்தையில் விற்க நோக்கம் கொண்டவர்கள் இந்த வகை உரிமத்தை பெற்றுக்கொள்ள வேண்டும், 

இதில் நீங்கள் எந்த வரையறையும் இன்றி ஐக்கிய அரபு இரட்சியம் முழுதும் மற்றும் வெளிநாடுகளுக்கும் உங்கல் பொருட்களை நேரடியாக இறக்குமதி , ஏற்றுமதி , மீள்  இறக்குமதி , மற்றும்  மீள் ஏற்றுமதி , செய்ய முடியும் . 

இதற்கான உரிமத்தை பெற்றும் கொள்ளும் முறை; 

01. இவ்வகை உரிமத்தில் பெயரளவில் ஸ்போஸர் ஒருவரை நியமிக்க வேண்டு அவர் ஐக்கிய அரபு இரட்சியதை சார்ந்தவராக இருத்தல்  வெண்டும் , 

02. DED வெப்சைடின் மூலம் கொம்பனிக்கான  பெயரை பதிவு செய்தல் 

03. கொம்பனிக்கான செயட்பாட்டை பதிவு செய்தல்

04. MOA ஒப்பந்தத்தை துபாய் நீதிமன்றில் சென்று கையெழுத்திடல் 

05. கொம்பணிக்கான இடத்துக்கான   குத்தகை ஒப்பந்தத்தை உருவாக்குதல் . 

06. இறுதியாக மேற்சோன்னவைகளை DED இல் சமர்ப்பித்து கம்பெனி உரிமத்தை பெறுதல் 

பங்குதாரர்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை ஒன்று  மற்றும் அதிகபட்சம் ஐம்பது ஆகும் .

கம்பெனி ஒன்றை பிரதான நிலப்பரப்பில் அமைப்பதுடன் தொடர்புபட்ட செலவு விபரம்

01பயர்ப்பதிவு கட்டணம் AED 620.00

02கொம்பனியின் செயட்பாட்டை பதிவு  செய்வதட்கான கட்டணம் AED 260.00

03MOA கட்டணம் : AED 1,000.00

04ஸ்போன் ஸருக்கான கட்டணம் AED 4,000.00

05குத்தகை ஒப்பந்தக் கட்டணம் AED 4,000.00

06கம்பெனி உரிமத்துக்கான  கட்டணம் AED 10,000.00

02 வரையறுக்கப்பல்ல நிலப்பரப்பில் அமைக்கப்படும் கம்பெனிகள். 


பொதுவாக ஏற்றுமதி இறக்குமதி சாராத மற்றும் பொருட்கள் விட்பனையுடன் தொடர்பு படாத ஏனைய தொழில்முறை சார்ந்த கம்பெனிகள் வரையறுக்கப்பட்ட  நிலப்பரப்பில் அமைக்கப்படும் 


உதாரணமாக IT CONSULTANCY   கம்பெனி ,ACCOUNTING ,போன்ற சேவை சார் கொம்பனிகள் இங்கே அமைக்கப்படும் 

 வரையறுக்கப்பட்ட  நிலப்பரப்பில் அமைக்கப்படும் கம்பெனிகளுக்கு உள்ளூர் SPONSOR தேவையில்லை .

100% உரிமையை வெளிநாட்டவர்  பெற்றுக்கொள்ள  முடியும்.  

நாணயத்திற்கான  தடை இல்லை.

தனிநபர் வருமான வ ரி இல்லை

திறமையான உள்கட்டமைப்பு மற்றும் தகவல் தொடர்புகள்

துபாயில் 30 க்கும் மேற்பட்ட வரையறுக்கப்பட்ட  நிலப்பரப்புகள்  உள்ளன, ஒவ்வொன்றும் அதற்கேயான தனித்துவத்தை கொண்டு விளங்குகிறது . 

வரையறுக்கப்பட்ட   நிலப்பரப்பில் கம்பெனியை அமைப்பதுடன் தொடர்புபட்ட செலவு விபரம்

சேவைக்கான உரிமத்தை பெற்றுக்கொள்வதட்கான செலவு விபரம்  எத்தனை  குடியுரிமை வீசாக்கள் தேவை என்பதை பொறுத்து  மாறுபடும்,

உதாரணமாக ஒரு குடுயுரிமை வீசாவை  பெற்றுக்கொள்ள வெண்டும் என்றால் சேவைக்கான உரிமத்தின் விலை 320,000 ரூபாயில் இருந்து ஆரம்பிக்கும் 

ஒரே உரிமத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட செயல்பாடுகள் அல்லது பல்வேறு செயல்பாடுகளைச் செய்ய அனுமதி  வழங்கப்படும் . மேலும் ஒரே உரிமத்தில் ஒருவர் வணிகம் மற்றும் சேவைக்கான நடவடிக்கைகளை தேர்வு செய்யவும் அனுமதி அளிக்கப்படுகின்றது .

ஒரு கம்பெனியை ஆரம்பித்து அதற்கான உரிமத்தை பெற்றுக்கொண்ட நபர் அவருக்கான குடியுரிமை விசாவை பெற்றுக்கொள்ள முடியும், 

 இதனை 3 வருடத்திற்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும், இதனை பெற்றுக்கொண்ட நபர் அவருடய குடும்பத்தினரான கீழ்வரும் நபர்களை SPONSOR செய்ய முடியும், 

01. மனைவி / கணவன் 

02. பிள்ளைகள் 

03. பெற்றோர் .

வணிகத்தை பொறுத்தவரையில் ஐக்கிய அரபு இராட்சியம் ஒரு சிறந்த நாடாக திகழ  ஒரு முக்கிய காரணமாக இருப்பது எல்லா  அரச அலுவல்களும் கணனி மயப்படுத்தப்பட்டு  இருப்பதோடு ஒரு செயற்பாட்டில் ஈடுபட முன் அதட்கு தேவையான அனைத்து தகவல்களும் தொலைபேசி மூலமாகவோ அதட்குரிய காரியாலயத்திட்கு நேரில் செல்வத்தினூடாகவோ  பெற்றுக்கொள்ள பமுடியும் என்பதுடன் . அரசாங்கத்தால் உரிமம் வழங்கப்பட்ட சில உத்தியோகத்தரினூடாகவும் வணிகத்தை ஆரம்பிப்பதற்கான முழுமையான உதவியையம் வழிகாட்டலையும் பெற்றுக்கொள்ள முடியும்.

ஐக்கிய அரபு இரட்சியதிள் உங்களது தொழிலை உருவாக்கி அங்கே குடியுரிமை விசா பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், கீழே உள்ள இலக்கத்தில் தொடர்பு கொள்ள முடியும், மேலும் இது சம்பந்தமான கேள்விகளுக்காண பதில்களையும் இவ்விளக்கத்தை நேரடியாக  தொடர்பு கொள்வதில் மூலமோ whatsapp இந்த மூலமோ  பெற்றுக்கொள்ள முடியும் 

தொடர்பு இலக்கம்

Rapid Growth Business Setup UAE

WhatsApp 00971 58 997 0338,  0094  77 771 1198

Website: :www.rapidgrowthuae.com

0 கருத்துரைகள்:

Post a comment