Header Ads



இலங்கை மருத்துவர் லண்டனில் கொரோனாவுக்கு மரணம்


லண்டன் மருத்துவமனையில் பணிபுரிந்த இலங்கையை சேர்ந்த மருத்துவர் கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில் அவர் குறித்து நண்பர்கள் உருக்கத்துடன் பேசியுள்ளார்.

Malinda Dissanayaka (51) என்ற மருத்துவர் லண்டனில் உள்ள North Middlesex University மருத்துவமனையின் அவசர மற்றும் விபத்து பிரிவில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார்.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வந்த Malindaவுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் கடந்த 16ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது பெயரில் ஒரு நிதி திரட்டும் பக்கம் அமைக்கப்பட்டுள்ளது, அதில் தற்போது வரை £13,000க்கும் அதிகமாக பணம் சேர்ந்துள்ளது, மொத்தமாக £100,000 இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Malinda பணிபுரிந்த மருத்துவமனையின் தலைமை நிர்வாகி Maria Kane கூறுகையில், மருத்துவர் Malinda குழுவில் நன்கு விரும்பப்பட்ட மற்றும் மதிப்புமிக்க உறுப்பினராக இருந்தார்.

தனது ஆன்மீக இயல்பு மற்றும் அவரது நோயாளிகளுக்கும் சக ஊழியர்களுக்கும் காட்டிய இரக்கத்திற்கும் அவர் பெயர் பெற்றவர் என கூறியுள்ளார்.

Malindaவுடன் பணியாற்றிய சக மருத்துவர்கள் கூறுகையில், அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளித்தோம்.

இந்த கொரோனா சமயத்தில் தனது நேரத்தையும், முயற்சிகளையும் நோயாளிகளுக்காக அவர் அர்பணித்தார் என கூறியுள்ளனர்.

Malinda பெயரில் நிதி திரட்டும் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: அவரது மென்மையான நடத்தை மற்றும் அமைதியான நடத்தை பல நோயாளிகளுக்கும் சக ஊழியர்களுக்கும் ஆறுதலளித்தது.

அவர் ஒரு அர்ப்பணிப்பு மருத்துவராக இருந்தார்.

Malindaவின் தன்னலமற்ற அணுகுமுறை மற்றும் அவரது நித்திய நம்பிக்கையால் அவர் நினைவுகூரப்படுவார் என கூறப்பட்டுள்ளது.

1 comment:

  1. நாட்டை விட்டு வௌியில் வாழ்ந்த ​ போதிலும் சேவையில் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த அவர் இந்த நாட்டுககும் பெருமை தேடித்தந்துள்ளார்.டாக்டர் மாலிந்தாவுக்கு அல்லாஹ் அருள்பாலிக்க வேண்டும் என நாம் பிரர்த்தனை செய்கின்றோம்.

    ReplyDelete

Powered by Blogger.