Header Ads



வர்த்தமானி வரும்வரைக்கும், நாம் அவசரப்படத் தேவையில்லை



கொறொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களைப் புதைக்கின்ற சர்ச்சையில் 30 பேர் கொண்ட நிபுணர் குழு 15 சிபாரிசுகளைச் செய்திருக்கிறது. அதில் சில கண்டிப்பான நிபந்தனைகளுடன் உடல்களைப் புதைக்க முடியும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் ஒரு பெரிய அரசியல் சிக்கல்களுக்குள், இது மாட்டி இருக்கிறது.

சுகாதார அமைச்சர் பவித்ராவினால் உருவாக்கப்பட்ட முதலாவது குழு எரிக்கத்தான் வேண்டும் என்ற நிலைப்பாடில் இருக்கிறது.

ராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ பிள்ளையினால் உருவாக்கப்பட்ட 30 பேர் கொண்ட குழு புதைக்கலாம் என்று சொல்கிறது.

இந்த இரு குழுக்களுக்கிடையிலும் சமரசம் செய்யும் கூட்டமொன்று சென்ற 31ம் திகதி நடைபெற்றது.முதல் குழு எரிக்கத்தான் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து அசைவதாக இல்லை.

அதனால் இப்பொழுது இரண்டு வகையான நிபுணர் கருத்துக்குள் இப்பிரச்சினை மாட்டி இருக்கிறது. இரண்டாவது குழுவின் சிபாரிசை சுகாதார அமைச்சர் நிராகரித்ததாகவும் இரு குழுக்களும் ஒரு முடிவிற்கு வருமாறும் கூறப்பட்டதாகவும் தகவல்கள் கசிகின்றன. இதற்குப் பின்னால் இருப்பது அரசியலும் இனவாதமும் தான். 

எதுவாகினும் வர்த்தமானி வரும்வரைக்கும் நாம் ஆசுவாசப்படத்தேவை இல்லை. இரண்டில் ஒரு முடிவிற்கு எல்லோரும் வந்து வர்த்தமானி வரும்வரைக்கும்  எமது ஜனனாயக ரீதியான எதிர்ப்பை நாம் தொடர்ச்சியாக முன்னெடுத்த்துச் செல்வோம்.

அத்தோடு இதை நாங்கள்தான் செய்தோம் என்று தம்பட்டம் அடிக்க வரும் பொய் அரசியல்வாதிகளின் பொய் வலையில் விழாதிருப்போம்.முஸ்லிம் அரசியல்வாதிகள் இதில் ஒரு துளி கூட சம்பந்தப்படாமல் இருக்கிறார்கள் என்பதுதான் இறுதிவரையான உண்மை.

Raazi Mohamed -


No comments

Powered by Blogger.