தற்போது நாட்டில் காணப்படும் கொரோனா தொற்றுக்களின், வகைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக நிறுவனங்கள் மரபணு பகுப்பாய்வு ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது.
இந்நிறுவனத்தில் பி.சீ.ஆர். பாிசோதனைகளை மேற்கொள்வதற்காக பெற்றுக்கொடுக்கப்பட்ட மரபணு மாதிாிகள் மற்றும் சுகாதார அமைச்சின் தேவைக்கேற்ப மாதிாிகள் சிலவற்றை உட்படுத்தி குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அதன் பணிப்பாளர் கலாபூஷணம் சந்திம ஜீவந்தர தொிவித்துள்ளார்.
கொரோனா தொற்று ஆரம்பமான கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் 80,000 பி.சீ.ஆர். பாிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் இந்நிறுவனத்தினால் 1,200 பி.சீ.ஆர். பாிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு கடந்த மாதம் முழுவதுமாக 36,000 பாிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்படுகின்றது.
0 கருத்துரைகள்:
Post a comment