Header Ads



பூரண ஆதரவு வழங்கும் திஹாரிய மக்கள் - கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மும்முரம்

திஹாரிய மக்கள் PCR பரிசோதனைகளுக்குப் பூரணமான ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும் திஹாரிய மக்கள் PCR பரிசோதனைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்ற கருத்து பிழையானது எனவும், இது வரை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 90 வீதத்திற்கும் மேற்பட்டவை பிரதேச முஸ்லிம்கள் எனவும் திஹாரிய கொரோனா விழிப்புணர்வுக் குழுவின் ஊடகப் பிரிவு பொறுப்பாளர் அஹ்ஸன் ஆரிப் தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்தபோது, கொரோனா விழிப் புணர்வுக் குழுவின் உப தலைவர் அஸ்மி சரப் அவர்கள் ஆரம்பத்தில் எந்த விதமான முன்னறிவித்தலுமின்றி கடந்த 30 திகதி PCR பரிசோதனைகளுக்காக அதிகாரிகள் வந்ததாகவும் குறித்த பரிசோதனைகள் மஸ்ஜித் ரவ்ழா பள்ளி வாயலில் இடம்பெற்றதாகவும் இவற்றிற்கான அனைத்து வசதிகளையும் ஊர் மக்களின் ஒத்துழைப்புடன் பள்ளி நிர்வாகமே மேற்கொண்டதாகவும் அதில் சுமர் 87 பேர் அளவில் கலந்துகொண்டதாகவும் அதன் பிறகு இரண்டாவது முறையாக மேற்கொண்ட பரிசோதனைகளில் 237 பேருக்கு PCR பரிசோதனைகள் மேற்கொண்டதாகவும் அதிலும் நேற்று 08ம் திகதி கண்டிவீதி ஜாமிஉத் தௌகீத் பள்ளிவாயலில் இடம்பெற்ற பரிசோதனைகளில் 241 பேர் கலந்து கொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தர். இறுதி இரண்டு சந்தர்ப்பங்களிலும் அவர்களது ஒரு நாளைக்கு 250 பேர் பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகளுடன் வந்ததாகவும் அதில் 90 வீதத்திற்கும் மேற்பட்ட பரிசோதனை களை அவர்கள் நடாத்தியதாவும் இது ஊர் மக்களின் ஒத்துழைப்புக் காரணமாகவே இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்தர். மேலும் திஹாரிய பிரதேசத்தைச் சேர்ந்த PHI மற்றும் MOH ஆகியேர் ஊர் தலைமைகளுடன் இணைந்து அவர்களது வேலைகளை மேற்கொள்வதாகவும் அவர்கள் ஊர் மக்களின் ஒத்துழைப்பு தொடர்பாக திருப்தியாக உள்ளதாகவும் அவர்களிடம் கேட்காமலேயே வைத்தி யர் யாப்பா என்பவர் குறித்த கருத்தினை ஊடகங்களுக்கு வழங்கியருப்பதாக அவர்கள் தெரிவித்ததாகவும் அஸ்மி சரப் அவர்கள் தெரிவித்தார். திஹாரியில் இதுவரை 32 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் முதலாவது நோயாளி அடையாளம் காணப்பட்ட உடனே திஹாரியைச் சேர்ந்த பள்ளிவயால்கள், பொது நிறுவ னங்கள் மற்றும் ஊர் மக்கள் இணைந்து கோவிட் விழிப்புணர்வுக் குழு ஒன்றினை அமைத்து ஊர் மக்களுக்கு விழிப்பு ணர்வு வழங்குதல், அரச அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குதல் மற்றும் கொவிட் இனை கட்டுப்படுத்துவதற்கான ஏனைய வேலைகள் போன்றவற்றினை மேற் கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மீள்பர்வை

No comments

Powered by Blogger.