December 13, 2020

அமைச்சரவைக்கு வரும் மாகாண, தேர்தல் தொடர்பான யோசனை


மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பான யோசனையொன்றை நாளை (14) அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான அனுமதியை அமைச்சரவையில் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

3 வருடங்களுக்கு அதிகமான காலம் மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டு வருவதால்,  இதனை நடத்துவது தொடர்பான நடவடிக்கைகளை விரைவாக எடுக்குமாறு, ஜனாதிபதியும் பிரதமரும் அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நாளை இணையவழி ஊடாக நடைபெறவுள்ள அமைச்சரவை சந்திப்பில் இந்த யோசனையை முன்வைக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a comment