Header Ads



தௌஹீட் ஜமாத்தின் அறிக்கையின் பின்னரே பிரச்சனை வந்தது - கொரோனாவால் மரணிப்பவர்களை தொடர்ந்தும் தகனம் செய்க


கொரோனாவினால் மரணமடைவோரின் சடலங்களை தகனம் செய்வதைத் தொடருமாறு, பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் டொலவத்த ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்த விஷயத்தில் மருத்துவ நிபுணர்கள் இறுதி முடிவு எடுக்கும் வரை தகனமுறை தொடரப்படவேண்டும் என்று அவர் கேட்டுள்ளார்.

கொரோனா முதல் அலையின் போது சுகாதார அதிகாரிகள் வகுத்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றி கொரோனாவினால் மரணமானவர்கள் தகனம் செய்யப்பட்டனர்.

எனினும் இரண்டாவது அலையின் பின்னர் இலங்கை தௌஹீட் ஜமாத் அமைப்பு, கொரோனாவினால் மரணமடையும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அரசாங்கம் இணங்கியுள்ளதாக வெளியிட்ட அறிக்கையின் பின்னரே இது தொடர்பான பிரச்சனை உருவானது என்று பிரேம்நாத் டொலவத்த சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சூழ்நிலையில் ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது நம்பிக்கைக்கு முன்னுரிமை கொடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கொரோனவினால் மரணமடந்தவர்களின் சடலங்களை குளிர்சாதன பெட்டிகளில் வைத்திருப்பது மருத்துவ கருத்துக்களை முற்றிலும் நிராகரிப்பதாகும்.

கொரோனவினால் மரணமடைவோரின் சடலங்களை தகனம் செய்யும் செயற்பாடு ஒரு குறிப்பிட்ட இனம் அல்லது மதத்தைத் தாக்கும் நோக்கம் கொண்டது அல்ல. அத்துடன் எல்லா சட்டங்களும் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்றும் பிரேம்நாத் டொலவத்த தமது கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

Powered by Blogger.