December 04, 2020

இஸ்லாமியர்களை புகழும் ரஷ்ய பேராயர் - எதிர்கால உலகம் இஸ்லாமியர்களுக்கானது என்கிறார்


- Mohammed Javith - 

ரஷ்யாவின் ஆர்ச் பிஷப் எனப்படும் Patriarch Kirill  - patriarch of Moscow ( விளாடிமிர் மிக்காயிலோவிக் குந்யாயேய்)  என்பவர் தான் கடந்த காலங்களில் தொடங்கி ரஷ்யவாழ் இஸ்லாமியர்களையும் அவர்களது மார்க்கத்தின் மீதான பிடிப்பான ஈமானையும் குறித்து தாம் செய்யும் எல்லா பிரசங்கங்களிலும்  தவறாமல் எடுத்துக்கூறி வருகிறார்.

சமீபத்தில் அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அவர்களிடமே இதுபற்றி கூறியது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது. 

அவர் கூறுகிறார் ,

ஏசுபிரானை கிறுஸ்தவர்களைவிட முஸ்லிம்கள் அதிகம் நேசிக்கிறார்கள், எனக்கு தெரிந்து ஒரு வயதான அம்மா கூறும்பொழுது...நான் ஒருவருக்கு ஒருமுறையல்ல பலமுறை கடனாளியாக உள்ளேன், இதற்கான பாவமன்னிப்பு கிடைக்குமா? என்றார்... யார் அந்த கடனாளி என கேட்டபொழுது..."என்னை சர்ச்சில் விட வரும் கார் டிரைவர், என்னை கொண்டு வந்து சர்ச்சில் விடும் ஒவ்வொரு தவணையும் அவர் என்னிடம் பணம் பெற்றுக்கொள்வதில்லை, மாறாக உங்களை போலொரு ஒரு வயதான அம்மா எனக்கும் உண்டு, அவரை வழிபாட்டுத்தலத்தில் கொண்டு வந்துவிட எப்படி பணம் வாங்குவேன் என்கிறார் ", என கூறினார். 

சரி, இது ஒரு கடனல்ல, அவரது நற்குணத்திற்காக நீங்கள் ஏசுவிடம் பிரார்த்தியுங்கள் என்றேன்,அவன் ஒரு முஸ்லிமாக இருக்கும்பட்சத்தில் இது கூடுமா? என கேட்டார்... முஸ்லிமும் கிறுஸ்தவரும் வெவ்வேறல்ல என்றேன்,  அதேபோல மற்றொரு பெண்மணி கூறும்போது, என் பிளாட்டில் குடியிருக்கும் ஒரு முஸ்லிம் இளைஞன் ஒவ்வொரு முறை நான் கடைவீதிக்கு சென்று கைகொள்ளாத பொருட்களை சுமந்து வருவதை கண்டு, என்னிடமிருந்து அவற்றை பெற்றுக்கொள்கிறான், எனக்கு லிப்டினை இயக்க உதவி புரிகிறான், நான் எனது தளத்திற்கு சென்று சேரும் வரை என்னோடு வந்து செல்கிறான் என்றார்... 

உண்மையில் ரஷியாவில் வாழும் முஸ்லிம்கள் இதயங்களை வெல்வோராக உள்ளனர். என்னுடைய வார்த்தையை கவனமேற்று கேளுங்கள், எதிர்கால உலகம் இஸ்லாமியர்களுக்கானது. அவர்களது நன்னடத்தையும், இஸ்லாம் மீதான அவர்களது சுயநலமற்ற ஈடுபாடும் இவ்வுலகினை வழிநடத்தப்போகிறது.

உலகில் மூன்று இஸ்லாமிய தலைமையிடங்கள் உருவாகி வருகின்றன, அவற்றின் துணை கொண்டு அவர்கள் அன்பின் வழியில் உலகாளப்போகிறார்கள். ஆனால் நம்மிடமிருந்து அவர்களுக்கு கொடுக்க குடிபோதை,பாலியல் தொழில் மற்றும் வெருப்பினை தவிர வேறெதுவும் இல்லை. நம்முடைய சமூகத்தில் உடலை திறந்தமேனிக்கு பெண்கள் தெருக்களில் உலாவருவதை காண்கிறோம் மாறாக அவர்கள் தங்களது பெண்களை பாதுகாக்கின்றனர். மதுவுக்கும், போதைக்கும், பாலியல் தொழிலுக்கும் தடைவிதித்து வைத்துள்ளனர், அவர்களில் யாரும் குடும்பத்தை புறக்கணித்து வாழ்வதில்லை. செசன்யாவில் வந்து பாருங்கள் அங்கு அனாதை இல்லமும் முதியோர் இல்லமும் இல்லை, ஆனால் நம் நாட்டில் பெற்றோர்களால் கைவிடபட்ட குழந்தைகளை பாருங்கள், நம்முடைய கடைவீதியில் ஒரு விசிலடித்து இருபது பேரை பாலியலுக்கு அழைக்கும் பெண் இருக்கிறாள்... நம்முடைய தேவையெல்லாம் தேவனே என் பாவங்களை மன்னியும், என் தேவைகளை பூர்த்தி செய்யும் என்று தான் உள்ளதே தவிர உளப்பூர்வமாக நம்மில் பாவங்கள் செய்வதை தடுத்துக்கொள்வோர் யாரும் உள்ளோமா? நிச்சயமாக முஸ்லிம்களை பார்த்து கிறுஸ்தவர்கள் தேவனிடம் நெருங்குவது எப்படி என கற்றுக்கொள்ள வேண்டும் என இஸ்லாமியர்களின் கண்ணியத்தை குறித்து புகழ்ந்துரைத்து பேசியுள்ளார்.

கடந்த 2009ல் இருந்து பாட்ரியார்ச் ஆப் மாஸ்கோ என அழைக்கப்படும் பேராயர் சிரில் (கிரில்) பரம்பரையாக தேவ ஊழியம் செய்யும் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். அவரது அண்ணன், அப்பா, தாத்தா,  கொள்ளுத்தாத்தா என வழி வழியாக ஆர்தடாக்ஸ் ஈஸ்டர்ன் சர்ச்சை சேர்ந்தவர்கள், ஆனாலும் கிறுஸ்தவர்களிடம் இறைவிஸ்வாசமில்லை, பெயரளவில் கிறுஸ்தவர்களாக இருந்து நீங்கள் ஏசுவை நெருங்க இயலாது, தேவனை நெருங்கும் ஒழுக்கத்தையும் வித்தையையும் இஸ்லாமிய சகோதரர்களை கண்டு பாடம்படியுங்கள் என்று பல இடத்திலும் கூறி வருகிறார்.

5 கருத்துரைகள்:

ஒழுகமுள்ளவர்களாக, உதவுவர்களாக, சேர்ந்து நடப்பவர்களாக வாழ்வதன் மூலமே தமது சமயத்தின், கலாசாரத்தின் சிறப்பை வெளிப்படுத்த முடியுமே தவிர மிமபர்களில் தொண்டை கிழிய சத்தம் போடுவதன் மூலமோ சண்டை பிடித்துக் கொண்டு தஹ்வா செய்வதன் மூலமோ சுற்றியுள்ளவர்களை பகைவர்களாக்க முடியுமே தவிர நல்லெண்ணத்தை வளர்க்க முடியாது. தொண்டை கிழிய சத்தம் போடுவதனை அவதானிக்கும் மொழி புரியாத ஒருவர் ஏனைய சமூகத்தைச் தூற்றிப்பேசுகின்றனரோ என எண்ணுவற்கு அதிக சந்தர்ப்பம் உண்டு. இந்த குறைபாட்டை சீராக்கக் கூட இஸ்லாமிய கட்டமைப்புக்கள் முயற்சி செய்ததாக அறிய முடியவில்லை. குறைந்தது இனிமையானதாக அதான் கூறுவதன் மூலம் அதனை மற்றவர்கள் மீண்டும் கேட்கத்தூண்டும் விதத்தில் இரசிக்கும் அமைப்பில் இருக்குமாயின் அதிகாலை அதான் அவர்களைத் தாலாட்டுவதாக அமையுமே தவிர வெறுப்பை உண்டுபண்ணாது. நான் கடமைநிமிர்த்தம் ஒரு இந்துகோவிலுக்குப் பக்கத்தில் ஒரு மாத கால தரிப்பிடப் பயிற்சிப் பட்டறையில் கலந்துக் கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதிகாலையில் இக்கோவிலில் சுப்ரபாதம் என எண்ணுகிறேன் இனிமையான ஒரு இசை. பயிற்சி முடியும் போது அதனைத் தவறவிடுவது சுமையாக மாறிவிட்டது. அவ்வாறான ஒரு கவர்ச்சியையும் இனிமையையும் அதான் கொடுப்பதற்காக சிறு பயிற்சியாவது வழங்க இஸ்லாமிய கட்டமைப்புக்கள் முயற்சி செய்ததாக அறிய முடியவில்லை. சிறு சிறு சீர் திருத்தங்கள் நிறைய இருக்கும் போது புரட்சிகள் செய்ய புறப்படுவோர் பற்றி என்ன சொல்ல.

பந்தை யாரும் நீரில் பொத்தி தான் வச்சாலும் பந்து வரும் தண்ணி மேல தான் அதே போலவே இஸ்லாம் பற்றிய உண்மைகளும் வெளியில் வருகின்றது.

End times Russia will help the Muslims according to Sheikh Imran Hussain. Orthdox Christians in Russia are different to Western Christians.
இஸ்லாம் ஒரு இயற்கை மார்க்கம் நவீன மார்க்கம் என்பது எல் லாம் குழப்பம் விளைவிக்கும் கற்பனைகளே

Post a comment