Header Ads



இலங்கையின் நவீன கால சுதந்திர, தினத்தை பிரகடனப்படுத்த வேண்டும் - கம்மன்பில


அமெரிக்கா எம்.சி.சி உடன்படிக்கையை கைவிட தீர்மானித்த தினத்தை, இலங்கையின் நவீன கால சுதந்திர தினமாக பிரகடனப்படுத்தவேண்டும் என உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்

எம்சிசி உடன்படிக்கையை வேறு ஒரு பெயரில் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

எம்.சி.சி உடன்படிக்கை உத்தியோகபூர்வமாக கைவிடப்பட்டுள்ளது அதனை வேறு ஒருபெயரில் நாட்டின் மீது திணிக்கப்போவதில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் எம்.சிசி உடன்படிக்கை குறித்து அமைதியாகயிருந்த சில பௌத்தமதகுருமார் தற்போது இந்த அரசாங்கம் வேறு ஒரு பெயரில் அந்த உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ளும் என அச்சம் வெளியிட்டுள்ளனர் என உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியில் நீடிக்கும்வரை எம்சிசி உடன்படிக்கையில் கைச்சாத்திடமாட்டோம் என தெரிவித்துள்ள உதயகம்மன்பில அமெரிக்காவின் செல்வாக்கை எதிர்க்கின்ற அரசாங்கம் அவ்வாறான உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதை ஏற்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா எம்.சி.சி உடன்படிக்கையை கைவிட தீர்மானித்த தினத்தை இலங்கையின் நவீன கால சுதந்திர தினமாக பிரகடனப்படுத்தவேண்டும் என உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தளங்களை அமைக்கும் திட்டத்தை அமெரிக்கா கைவிட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. சீனாவிடம் சரணடைந்து பாதுகாப்பு பெறும் நிலை ஏற்படும். அமெரிக்கா இந்தியா இணைந்து ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு வழி விடப்போகிறீர்கள்.

    ReplyDelete
  2. Vilunthaaalum mann ottalla... ipdiyum karanam adippaaangalo

    ReplyDelete
  3. விழுந்தும் மீசையில் மண்படவில்லை இலங்கையின் கடன் பெறும் தகுதி C நிலைக்கு தள்ளப்பட்டதால் வங்கரோத்து நிலையில் உள்ளதால் அமெரிக்கா உடன்படிக்கையை இரத்து செய்தது

    ReplyDelete
  4. இலங்கை சீனாவின் காலணியாகிவிட்டது, அமேரிக்க-இந்திய கூட்டணிக்கு எதிரி என்றாகிவிட்டது.

    ReplyDelete

Powered by Blogger.