Header Ads



முஸ்லிம்களின் உடல்கள் தகனம் - எமது பிள்ளைகளுக்கு மீண்டும் வன்முறையைக் கையளித்து விடாதீர்கள் - இம்தியாஸ் கோரிக்கை


கொரோனா வைரஸால் இறந்த முஸ்லிம்களின் சடலங்களை தகனம் செய்வதற்கான அரசாங்கத்தின் முடிவை உயர் மருத்துவ நிபுணர்கள் மற்றும் அரசாங்கத்தில் பெரும்பான்மையினர் அங்கீகரிக்கவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்தார்.

ஐந்து தசாப்தங்களாக நாடு வன்முறையால் பீடிக்கப்பட்டிருப்பதாகவும், இவ்வாறான தீர்வுகள் மூலம் எமது பிள்ளைகளுக்கு மீண்டும் வன்முறையைக் கையளிக்காமல், மனிதநேயம் என்ற பெயரில்  நாட்டின் உயர்மட்ட மதத் தலைவர்கள் அநீதிகளுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டிய நேரம்  இது என்றும் அவர் கூறினார்.

கொரோனா தொற்றுநோயால் இறந்தவர்களின் சடலங்களை தகனம் செய்ய அரசாங்கம் எடுத்த முடிவின் காரணமாக முஸ்லிம் சமூகத்தில் தற்போதைய நிலைமையில் எழுந்துள்ள நிலைப்பாடும் முன்னோக்கிய நகர்வுகளும் குறித்து இம்தியாஸ் பாக்கிர் மாகாரிடம்  லங்கா சர சகேதர மொழி ஊடகம் வினவிய கேள்விக்கு பதிலளித்த பேதே இவ்வாறு கூறிப்பிட்டார்.

இது நமது மதங்களின் மதிப்புகளுக்கு முரணானது.  இது எங்கள் நாட்டின் பிரதிவிம்பத்திற்கு  கடுமையான சேதம் விளைவிக்கும் விஷயம் என்று சொல்ல வேண்டும் என்று கூறிய அவர் குறிப்பாக, ஆனந்தா கல்லூரி உங்களுக்கு வழங்கிய மதிப்புகளுக்கு ஏற்ப, நாட்டின் பௌத்த போதனைகளுக்கு ட்பட்டு தசராஜ தரமங்களுக்கு ஏற்ப நாட்டை ஆளுமாறு ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷவை நான் கேட்டுக்கொள்கிறேன்.  இன்று நீங்கள் மேற்கொண்டுள்ள இந்த பயணம் நாட்டுக்கு சங்கடமாக இருக்கிறது.  உங்களுடைய இந்த பயணம் நாட்டை இழிவுபடுத்துவதாக அமைந்து காணப்படுகிறது. இது நாட்டின் பிரதிவிம்பத்தை கடுமையாக சேதப்படுத்துகிறது.

https://lankasara.com/පුවත්/සිරුරු-භූමදානය-ගැන-වසංගත/

1 comment:

  1. அழகான நிதானமான ஆழ ஊடுருவும் கருத்து. எழிய தமிழில் சொன்னால் பிறப்பும் வளர்ப்பும் நல்லதென்றால் நல்லவற்றைச் சிந்தித்து செயல்படுமாறு கேட்டிருக்கிறார்.

    ReplyDelete

Powered by Blogger.