Header Ads



"அஸாமிற்கும், அக்கரைப்பற்றிற்கும் தனிப்பட்ட பகையேதுமில்லை" - தரக்குறைவாக பின்னூட்டமிடுவதை தவிருங்கள்


- சட்டத்தரணி  A.L.Aazath - 

"Policeman Killed in Akkaraipattu" என்றவாறு நேற்று NewsWire ல் செய்தி பிரசுரிக்கப்பட்டதும், அக்கரைப்பற்றின் மீது பற்றுள்ளவர்களும், குறிப்பிட்ட செய்தியின் உண்மைத் தன்மை அறிந்தவர்களும், செய்தியின் தலைப்பிற்கும், கொலைச்சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கும் எந்தத் தொடர்பும் காணப்படாததன் காரணமாக, பலர் நாகரீகமான முறையிலும், சிலர் அநாகரீகமான முறையிலும் தங்களது பின்னூட்டங்களை இட்டுக் கொண்டிருந்ததனை அவதானித்த நான், தனிப்பட்ட ரீதியில் சகோதரர் Azzam Ameen அஸாம் அமீனைத் தொடர்பு கொண்டு விடையத்தினைத் தெளிவுபடுத்தினேன். அப்போது அவர் “பொலிஸ் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையினை அவ்வாறே தான் பிரசுரித்ததாகக்” கூறினார். 

அஸாமிற்கும் அக்கரைப்பற்றிற்கும் தனிப்பட்ட பகையேதுமில்லை என எமக்கு நன்றாகத் தெரியும். நாகரீகமற்ற முறையில் தரக்குறைவாக சிலர் சகோதரர் அஸாமிற்கு எதிராக பின்னூட்டல்களைச் (comments) செய்திருந்ததையும், அவற்றைப் பலர் லைக் (like) செய்திருந்ததையும் அவதானிக்கும் போது கவலையாக இருந்தது. 

ஒரேயொரு விடையத்தை முதலில் எனக்கும், அடுத்ததாக உங்களுக்கும் எத்தி வைக்கின்றேன். நாமிடும் ஒவ்வொரு பின்னூட்டலும், அதனுடன் தொடர்புற்ற ஒவ்வொரு லைக்ஸ்களும் எமக்கு எதிராக மறுமையில் சாட்சி பகராமல் இருப்பதற்கு ஏற்றாற்போல் எமது விரல்களைப் பாவிக்கக் கடமைப் பட்டுள்ளோம். 

எமது எழுத்தினால், செய்கையினால், பேச்சினால், லைக், கொமன் போன்ற இதர விடயங்களினால் நோவினை செய்துவிட்டு பாதிக்கப்பட்டவர்கள் எம்மை மன்னிக்காவிட்டால் எமது நிலைமை என்ன?. 

எமது கைகளில் இருக்கும் ஸ்மார்ட் போன்கள் மிகப்பெரிய அமானிதம். கொமன்ட் இட்டவர்களும் லைக் இட்டவர்களும் நீங்கள் பிழை செய்ததாகக் கருதினால், உடனடியாக அஸாமிடம் மன்னிப்பைக் கேட்டுக் கொள்ளுங்கள். 

விடயத்திற்கு வருகின்றேன்; 

அக்கரைப்பற்று என்பது, அக்கரைப்பற்று பிரதேச செயலக எல்லையோடு நிர்வாக ரீதியாக அழைக்கப்பட்டாலும், அக்கரைப்பற்று என்பது, அட்டாளைச்சேனை,பாலமுனை, ஒலுவில் மற்றும் ஆலையடிவேம்பு உள்ளடங்கலான முழு பிரதேசத்தையும் குறித்து நிற்கின்றது. 

தேசிய ரீதியாக பெரும்பாலான மக்களுக்கு ஒரு விடயத்தை அடையாளப்படுத்துமுகமாக மேற்குறிப்பிட்டவாறு (ஏனைய பிரதேசத்தவர்கள் இலகுவாக அடையாளம் கண்டுகொள்ளும் வகையில்) பிரபல்யமான ஊரினை அல்லது மாவட்டத்தை குறிப்பிட்டு செய்தியை வெளிப்படுத்துவது வழக்கமாகும். 

இது போன்று தான் கல்முனை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கொழும்பு, கண்டி என்று குறிப்பிட்ட செய்திகளைப் பிரசுரிக்கும் போது காணப்படும். உள்ளே சென்று பார்த்தால், குறிப்பிட்ட பிரதேசத்தின் ஏதோவொரு மூலையில் காணப்படும் பகுதி அல்லது ஊராகக் இருக்கும். 

இலங்கையில் ஏதோவொரு மூலையில் அல்லது உலகின் ஏதோவொரு மூலையில் வசிக்கின்ற இலங்கைப் பிரஜையாக எம்மை எண்ணிக்கொண்டு இந்தச் செய்தியைப் பார்க்கும்போது குறிப்பிட்ட விடயத்திற்குத் தீர்வு கிடைக்குமென்று நம்புகின்றேன். 

அத்துடன் கொலைச்சம்பவம் இடம் பெற்ற பாலமுனைப் பிரதேசமானது, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்டது. அத்துடன், சம்பவத்தில் காயமடைந்தோர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்ட பிரேதத்தினை அக்கரைப்பற்று நீதிமன்ற நீதவான் சென்று பார்வையிட்டார். இங்கு ஒரு பந்தியில் எத்தனை இடங்களில் “அக்கரைப்பற்று” என்ற சொல் இடம்பெறுகின்றது என்பதை அவதானியுங்கள். 

அத்துடன் மாநகர மக்களின் எண்ணத்திலும் சிந்தனையிலும் செயற்பாட்டிலும் மாநகர மக்களாக இருக்க வேண்டும்.  வெறுமனே “மாநகரம்” என்ற பெயர்ப் பலகை இடுவதனால் மாநகர மக்கள் ஆகிவிட முடியாது என்பது எனது தனிப்பட்ட கருத்து. 

மேலும் எம்மில் ஒருவரின் சிந்தனை, சொல், செயல் என்பவை  எமது ஒட்டுமொத்த சமூகம், மதம், பிரதேசம் ஆகியவற்றை விமர்சனத்திற்குள்ளாக்கும் விதமாக இருக்காமல் பார்த்துக் கொள்வது எமது ஒவ்வொருவரினதும் தலையாயக் கடமையாகும்.

4 comments:

  1. If there is a name called PALAMUNAI.... Stop this idiotic justification...

    ReplyDelete
  2. அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட.......
    அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று அருகில் பலமுனை பிரதேசம் .
    அடடளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவு பலமுனை.......
    அடடளைச்சேனை பிரதேச சபை, பலமுனை.......

    முதலில் தமிழ் மொழியின் பாவனையை நன்றாகக் கற்றுக்கொள்ள வேண்டும்...

    ReplyDelete
  3. நாகரீகம் சொல்லிக்கொடுத்து வருவதில்லை அது வாழும் சூழல் வழிநடத்தும் தலைவர்களின் குணநலன்களைப் பிரதிபலிக்கும். அதிலும் குறிப்பாக இலங்கையில் சில முஸ்லிம் பிரதேசங்கள் உள்ளன அவர்கள் தான் அதிக புத்திசாலிகள் என்ற நினைப்பு மட்டுமன்றி தாங்கள் குறிப்பிட்ட மகனகர பிரதேச மக்களிடம் அதிகபிரசங்கித்தனமும் ஆட்கொண்டுள்ளது. கொலை காரர்களிடம் கத்தியைக் கொடுத்தமாதிரி சிலர் கையில் ஸ்மாட் போன் இருப்பது மிகவும் நிலவரம் தான் காணப்படுகிறது. இதனைச் சொன்னால் எங்களுக்கு அவர்கள் மீது பொறாமை என்பார்கள். அவர்களிடம் என்ன நல்லது இருக்கிறது பொறாமைப்படுவதற்கு யான் அறியேன் பராபரமே.

    ReplyDelete
  4. சகோ.Suhaib ன் comment லேயே அவரது பிரச்சனை தெரியவருகிறது...

    'அவர்கள் அதிக புத்திசாலிகள்'
    'மாநகர சபை பிரதேசம்'
    'எங்களுக்கு அவர்கள் மீது பொறாமை'

    ReplyDelete

Powered by Blogger.